/tamil-ie/media/media_files/uploads/2018/10/patel-statue-759.jpg)
படேல் சிலை திறப்பு
சர்தார் வல்லபாய் படேல் சிலை : இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல். அவர் இந்தியாவின் முதல் துணை பிரதமராக பணியாற்றியவர். ஒருங்கிணைந்த இந்தியா உருவாக்கத்திற்காக அதிக அளவு உதவியவர்.
சர்தார் வல்லபாய் படேல் சிலை
அவர் இந்நாட்டுக்கு செய்த சேவையை போற்றும் வகையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக, மிக உயரமான, பிரமாண்ட சிலை அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி அறிவித்தார். 2014ம் ஆண்டு சர்தால் வல்லபாய் படேல் சிலை தொடக்கப்பணிகள் ஆரம்பித்தன. இதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தானமாக பெறப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2018/10/sardar-patel-statue-2-759.jpg)
தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்ட நிலையில், இந்த சிலையின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டில் இருக்கும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருக்கிறது. வல்லபாய் படேல் சிலையின் மொத்த உயரம் 182 மீட்டராகும். 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ள தீவில் இந்த சிலை கம்பீரமாக நிற்கப் போகிறது. இந்த சிலையை சுற்றி 12 சதுர கி.மீ. அளவுக்கு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. To read this article in English
சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டம்
நர்மதா நதிக்கரையோரம் மிக பிரம்மாண்டமாய் 182 மீட்டர் உயரத்தில் அமைய இருக்கும் இந்த சிலையை சுற்றி மாநில இல்லங்களை அமைக்க ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அழைப்பு விடப்பட்டிருக்கிறது. கேவதியா காலனியில் ஒவ்வொரு மாநிலமும் தங்களின் அரசு இல்லங்கள் மற்றும் பயணியர் விடுதிகளை கட்டிக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உத்தரப் பிரதேசம் மற்றும் நாகலாந்து மாநிலங்கள் தங்களின் ஒப்புதல்களை குஜராத் அரசிற்கு தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.