Gujarat CM Vijay Rupani resigns : குஜராத் முதல்வராக பணியாற்றி வந்த விஜய் ரூபானி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார் என்று பி.டி.ஐ. தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மூன்றாவது பாஜக முதல்வர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
இந்த ஆண்டில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த நான்காவது பாஜக முதல்வர் ரூபானி என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதம் பி.எஸ். எடியூரப்பா கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். உத்தரகாண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்தும் தன்னுடைய பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரூபானி தன்னுடைய முடிவை அறிவித்தார். ஆனால் எதன் காரணமாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்ற காரணத்தை கூறவில்லை.
“குஜராத்தின் முதல்வராக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த பாஜகவிற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். மோடியின் தலைமையில், மாநிலத்தின் மேம்பாட்டிற்காக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது” என்று அவர் கூறினார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான முழுமையான செய்திகளை தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil