பிரதமர் நரேந்திர மோடி பட்டிதார் சமூக நிகழ்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய சில நிமிடங்களுக்குப் பிறகு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீரென ராஜினாமா செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குஜராத்தின் பெரிய நலன் கருதி” கட்சியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ரூபானி இரண்டாவது முறையாக 14 மாதங்களுக்கும் மேலாக முதல்வராக இருந்த நிலையில் அவருடைய ராஜினாமா அறிவிப்பு வந்துள்ளது. அமித்ஷாவின் ஆதரவாளராகக் கருதப்பட்ட அவர், ஆகஸ்ட், 2016ல் ஆனந்திபென் படேலுக்கு பிறகு குஜராஜ் முதல்வரானார். சமீபத்தில் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததைக் கொண்டாடினார்.
ரூபானியின் கடும் போட்டியாளர் துணை முதல்வர் நிதின் படேல் உட்பட, ரூபானியை மாற்றுவதற்கான ஊகங்களுக்கு இடையில், அவரது ராஜினாமா கடிதம், முதல்வர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டது. மோடி குஜராத்தில் கட்சியின் முகம் என்றும் அடுத்த தேர்தல் பிரதமரின் தலைமையில் நடக்கும் என்றும் கூறினார்.
குஜராத் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் யமல் வியாஸ் கூறுகையில், கட்சியின் மத்திய சட்டமன்றக் குழு சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை எந்த நேரத்திலும் கூடி புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு நியமிக்க வேண்டும் என்றும், பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும். அதன் பிறகு ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் எம்.பி.யாக இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று கூறினார்.
புதிய முதல்வர் பதவிக்கு சனிக்கிழமை மாலை வரை நிதின் படேலைத் தவிர, பாஜக குஜராத் தலைவர் சி.ஆர்.பாட்டீல், மாநில துணைத் தலைவர் கோர்தன் ஜடாஃபியா, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் கட்சி நிர்வாகிகள் டியூ, தாமன், தத்ரா நகர் ஹவேலி மற்றும் லட்சத்வீப் பிரபுல் படேல் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. பாட்டீலைத் தவிர, மீதமுள்ளவர்கள் பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பட்டீதார் பாஜகவிலிருந்து விலகிச் சென்ற ஒரு சமூகம். சமீபத்திய நாட்களில், மாநிலத்தின் அடுத்த முதல்வர் பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
பாட்டீல் வெளியிட்ட ஒரு வீடியோ அறிக்கையில், அவர் முதல்வர் ரேஸில் இல்லை என்றும் “ஆனால், 2022ல் சட்டமன்ற தேர்தலில் 182 இடங்களை வெல்வது என்ற இலக்கை நாங்கள் நிச்சயமாக முடிப்போம்.. புதிய முதல்வர் யார் என்று கட்சியும் விஜய் ரூபானியும் முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.
பொதுவாக ரூபானி பொது நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஊடகவியலாளர்களை சந்தித்து பேசுவார். ஆனால், சனிக்கிழமையன்று, அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் சர்தார்தம் பவன் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர் முதலில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பாட்டீல் மற்றும் நிதின் படேல் ஆகியோர் உடனிருந்தனர். சில நிமிடங்கள் கழித்துப் அவரைப் பின்தொடர்ந்தனர்.
விரைவில், அங்கிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாஜக தலைமையகத்தில் ஒரு ரகசியக் கூட்டம் நடைபெற்றது. அங்கு தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், அமைப்பு செயலாளர் ரத்னாகர், மத்திய அமைச்சர் மற்றும் குஜராத் கட்சி பொறுப்பாளர் பூபேந்தர் யாதவ் மற்றும் பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த பிறகு, ரூபானி ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், “இது ஒரு ரிலே ரேஸ், எல்லோரும் ஓடி முன்னேறிச் செல்கிறார்கள். ஐந்து வருடங்கள் எனக்கு பொறுப்பு இருந்தது. நான் ஓடிக்கொண்டிருந்தேன். இப்போது, கொடியை வேறு ஒருவருக்குக் கொடுப்பேன். (இப்போது) அவர் ஓடுவார் … எனது ராஜினாமாவுடன், கட்சியின் புதிய தலைமைக்கு வாய்ப்பு கிடைக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் குஜராத்தை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வோம்.” என்று கூறினார்.
அவரது ராஜினாமாவின் பின்னணி குறித்து ரூபானி கூறுகையில், "இது எங்கள் கட்சியில் ஒரு இயல்பான செயல். கட்சித் தொண்டர்கள் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு பொறுப்புகளைப் பெறுகிறார்கள். நாங்கள் அதை ஒரு பதவி என்று அழைக்கவில்லை. நாங்கள் அதை ஒரு பொறுப்பு என்று அழைக்கிறோம். இப்போது, கட்சி எனக்கு கொடுக்கும் எந்தப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்வேன்.” என்று கூறினார்.
ரூபானியின் அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தில், “குஜராத்தின் வளர்ச்சிப் பயணம் புதிய தலைவரின் கீழ் புதிய உற்சாகத்துடனும் புதிய ஆற்றலுடனும் பிரதமரின் தலைமையில் தொடர வேண்டும் என்று நான் நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கும் ரூபானி நன்றி தெரிவித்தார். முன்னாள் பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷாவிடமிருந்து நிர்வாகத்தில் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்ளவும், கட்சியின் செயல்பாடுகளில் அவரது ஒத்துழைப்பு மற்றும் உதவியைப் புரிந்துகொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார்.
ஆகஸ்ட் 15ம் தேதி, கட்சித் தலைமையகத்தில் சுதந்திர தின கொடியேற்றத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, சி.ஆர். பாட்டீல், 2022 மாநிலத் தேர்தல்கள் ரூபானி மற்றும் நிதின் படேல் தலைமையில் நடைபெறும் என்று கூறினார்.
இருப்பினும், பாட்டீல் பல சமயங்களில் ரூபானியை அதே இடத்திலேயே வைத்திருப்பதாகத் தெரிகிறது. பாஜகவின் தலைமை அலுவலகத்தில் மக்களின் குறைகளைக் கேட்க அமைச்சர்களைக் கேட்டார். இது முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. அவரது தொகுதியில் ரெம்டேசிவிர் விநியோகத்தை ஏற்பாடு செய்தார். கோவிட் உச்சத்தில் மருந்து ஏற்பாடு செய்ய அரசு போராடும் நேரம்.
ரூபானியின் ராஜினாமா கடிதத்தில் பாட்டீல் பற்றி குறிப்பிடப்படவில்லை.
முதல்வர் போட்டியாளர்களில் ஒருவராக கூறப்படும் ஜடாஃபியா, தி சண்டே எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “கட்சி உயர் மட்ட தலைவர்களால் இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டது. கேவாடியாவில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் (செப்டம்பர் 1-3 வரை) எதுவும் விவாதிக்கப்படவில்லை. இதுதான் இன்றைய நிலை” என்று கூறினார்.
அவர் புதிய முதல்வராக இருக்க வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஜடாஃபியா, “நான் ஒரு தொண்டன், ஒரு தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.” என்று கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் கடைசியாக முதல்வராக இருந்து பங்கேற்ற ரூபானி, மத்திய மீன்வளத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் விஷ்வா பட்டிதார் சமாஜத்தின் தலைவர் காக்ஜி சுதாரியா ஆகியோருடன் முன் வரிசையில் அமர்ந்தார். தனது உரையில், ரூபானி பட்டிதார் சமூகத்தின் எதிர்கால திட்டங்களுக்கான நிலப் பயன்பாடு தொடர்பான தளர்வுகளை அறிவித்தார்.
ஆனந்திபென் படேலிடம் இருந்து முதல்வராக பொறுப்பேற்ற ரூபானி, 2017 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்தார். இருப்பினும், அந்தக் கட்சி 182 இடங்களில் 99 இடங்களை மட்டுமே பெற்றது. 1995ல் குஜராத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அக்கட்சி பெற்ற மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.