scorecardresearch

குஜராத் தேர்தல்: ஜடேஜா மனைவி அசத்தல் வெற்றி… வாக்கு வித்தியாசம் இவ்வளவா?

குஜராத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனையில் ரிவாபா ஜடேஜா அமோக வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத் தேர்தல்: ஜடேஜா மனைவி அசத்தல் வெற்றி… வாக்கு வித்தியாசம் இவ்வளவா?

Gujarat Assembly Election News in tamil: Rivaba Jadeja slips to 3rd place in Jamnagar North: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி ஆல்-ரவுண்டர் வீரராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ரிவாபா சோலங்கியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

32 வயதான ரிவாபா ஜடேஜா மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். இவர் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். தற்போது அவர் குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

ரிவாபா ஜடேஜா அசத்தல் வெற்றி… வாக்கு வித்தியாசம் இவ்வளவா?

இந்நிலையில், குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குஜராத்தின் வடக்கு ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்: குஜராத் தேர்தலில் களமாடும் ஜடேஜா மனைவி… சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது ரிவாபா ஜடேஜா தோல்வியைத் தழுவ வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. பிறகு அவர் 3வது இடத்திலும், காங்கிரஸ் 2வது இடத்திலும் ஆம் ஆத்மி முதலிடத்திலும் இருந்தனர். பின்னர், பிற்பகல் வாக்கு எண்ணிக்கையின் போது தொடர்ந்து படிப்படியாக முன்னிலை வகிக்க ஆரம்பித்தார் ரிவாபா. இறுதியில் அவர் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ருசித்தார்.

பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜாவுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் கள வேட்பாளராக இது தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 149 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையை கடந்து பாஜக அரசு வெற்றி உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் 22 தொகுதிகள், ஆம் ஆத்மி 6, சுயேட்சைகள் 3, சமாஜ்வாதி 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. 149 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்க உள்ளது.

இதையும் படியுங்கள்: குஜராத் தேர்தலில் களமாடும் ஜடேஜா மனைவி… சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Gujarat election results 2022 rivaba jadeja slips to 3rd place tamil news

Best of Express