Advertisment

LIVE UPDATES: குஜராத் முதல்கட்ட வாக்குப்பதிவு : நண்பகல் வரை 21.09% வாக்குகள் பதிவு

முதலமைச்சர் விஜய் ரூபானியின் ராஜ்கோட் (மேற்கு) தொகுதியில் மதியம் வரை 29.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக ஜாஸ்டன் தொகுதியில் பதிவாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LIVE UPDATES: குஜராத் முதல்கட்ட வாக்குப்பதிவு : நண்பகல் வரை 21.09% வாக்குகள் பதிவு

மதியம் 2.10: சூரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், மூத்த குடிமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வந்தபோது

Advertisment

மதியம் 2.00: சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது எனவும், அதற்கு பதிலாக வேறு இயந்திரங்கள் மாற்றப்பட்டது எனவும், பாவ்நகர் மாவட்ட ஆட்சியர் ஹர்ஷத் படேல் கூறினார்.

மதியம் 1.55: முதலமைச்சர் விஜய் ரூபானியின் ராஜ்கோட் (மேற்கு) தொகுதியில் மதியம் வரை 29.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமான வாக்குகள் ஜாஸ்டன் தொகுதியில் பதிவாகியுள்ளது.

publive-image

காலை 10.30 : மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல் வாக்களித்துவிட்டு, ‘110 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் ஜெயிக்கும்’ என்றார்.

காலை 10.15 : ராஜ்கோட் ரவி வித்யாலயா பூத்தில் கிரிக்கெட் வீரர் புஜாரா வாக்களித்தார்.

காலை 9.15:குஜராத்தின் தற்போதைய முதலமைச்சர் விஜய் ரூபானி, ராஜ்கோட்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இவர், ராஜ்கோட் மேற்கு தொகுதியில் காங்கிரஸின் இந்திரனில் ராஜ்யகுருவுக்கு எதிராக போட்டியிடுகிறார்.

publive-image

காலை 9.05: பாஜக 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறுவோம் என அக்கட்சியின் மாநில தலைவர் ஜித்து வகானி வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவர், பாவ்நகர் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

publive-image

காலை 8.45: : மொத்தம் உள்ள 24,689 வாக்குச்சாவடிகளில் 27,158 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காலை 8.40: சூரத்திலுள்ள சோர்யாசி தொகுதியில் வாக்குப்பதிவு துவங்கியது.

காலை 8.35: குஜராத் பாஜக தலைவர் ஜித்துபாய் வகானி, பாவ்நகரில் வாக்களித்தார்.

publive-image

காலை 8.25: சூரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களித்தபோது

publive-image

காலை 8.15:

காலை 8.07: 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியது.

பின்னணி:

குஜராத் சட்டப்பேரவையின் முதல்கட்ட தேர்தல் இன்று (சனிக்கிழமை) துவங்கியது. இதில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. சௌராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள தொகுதிகள் இத்தேர்தலில் அடங்கும். இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. அவற்றில் வடக்கு குஜராத், மத்திய குஜராத் ஆகியன அடங்கும்.

குஜராத் தேர்தலில் வாக்களிக்குமாறு, குறிப்பாக இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் அழைப்பு விடுத்தார்.

Bjp Narendra Modi Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment