ராம ஜென்மபூமி இயக்கத்தில் இருந்தே குஜராத் - உ.பி ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஆழமான தொடர்பு உள்ளது. நரேந்திர மோடியின் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி தொடர்வதை உறுதி செய்வதற்காக முதன்முறையாக, உ.பி-யின் பா.ஜ.க அணி குஜராத்தில் இறங்கியுள்ளது.
டிசம்பர் 2002-ல், பல மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ், குறைந்தபட்சம் 6 மாநில முதல்வர்கள் மற்றும் பல தேசியத் தலைவர்கள் அப்போதைய குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய பறந்தனர்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் கலவரத்தின் பின்னணியில் தேர்தல் நடத்தப்பட்டது. அக்ஷர்தாம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, கலவரத்திற்கு ‘பழிவாங்கப்படும்’ என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, ‘இந்து ஹிருதய் சாம்ராட்’ (இந்து இதயங்களின் ஆட்சியாளர்) என்ற புகழைப் பெற்றார். அவர் மாநிலம் முழுவதும் கௌரவ யாத்திரை நடத்தினார். அவரது உரை பெரும்பாலும் சிறுபான்மையினரையும், இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரையும் குறிவைத்து விமர்சித்தது.
அந்தத் தேர்தலில் உருவான இந்துத்துவா அலை பா.ஜ.க 182 இடங்களில் 127 இடங்களை வெற்றி பெற வழிவகுத்தது. அதுதான் இதுவரை பா.ஜ.க-வின் சிறந்த செயல்திறன். ராஜஸ்தானின் அசோக் கெலாட், மகாராஷ்டிராவின் விலாஸ்ராவ் தேஷ்முக், கர்நாடகாவின் எஸ்.எம். கிருஷ்ணா, சத்தீஸ்கரின் அஜித் ஜோகி, மத்தியப் பிரதேசத்தின் திக்விஜய் சிங் மற்றும் டெல்லியின் ஷீலா தீட்சித் போன்ற காங்கிரஸின் பிரபலங்களால் கட்சிக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்கியது. ஆனால், அது அக்கட்சி ஆட்சிக்கு வர உதவவில்லை. இருமுனைப் போட்டியில் காங்கிரஸ் 51 இடங்களிலும், 2 இடங்களில் சுயேட்சைகளும், 2 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றன.
கடந்த இரண்டு வாரங்களில் குஜராத்தில் பா.ஜ.க நடத்திய வி.ஐ.பி-களின் பிரசாரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸின் பிரசாரத்தை ஒத்திருந்தாலும், முந்தையது பல உத்தி அடுக்குகளைக் கொண்டது. 2022-ம் ஆண்டில் புதிய அம்சம் என்னவென்றால், ராம ஜென்மபூமி இயக்கத்திலிருந்து குஜராத்துடன் ஆழமான தொடர்பைக் கொண்ட ஒரு மாநிலமான உத்தரபிரதேசத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான பிரச்சாரகர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘இரட்டை எஞ்ஜின் அரசாங்கம்’ என்ற முழக்கத்தில் பாஜக வெற்றி பெற்றது.
முதன்முறையாக, குறைந்தபட்சம் 160 பா.ஜ.க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய ஒரு படை உத்திரபிரதேசத்திலிருந்து குஜராத்தில் பிரச்சாரம் செய்ய இறங்கியுள்ளது. எம்.பி.க்கள் முதல் மாவட்ட அளவிலான தலைவர்கள் வரை அது இதுவரை நடந்த பிரச்சாரங்களில் மிகப்பெரிய பிரச்சாரம் என்று உ.பி. தலைவர்கள் கூறுகிறார்கள்.
மோர்பிக்கு அருகிலுள்ள வான்கனேரில் ஜே.சி.பி வாகனத்தின் கைகள் யோகி ஆதித்யநாத்தை‘இந்து ஹிருதய் சாம்ராட்’ என்று வர்ணிக்கும் பதாகைகள் வைக்கப்பட்ட ஒரு மேடையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர்கள் அவரை ‘புல்டோசர் பாபா’ என்று புகழ்ந்து கோஷமிட்டார்கள்.
தற்போது அவர் பல கூட்டங்களை நடத்தியுள்ளார். ஆதித்யநாத் தனது உரைகளில் நாட்டிற்கு தேவையான‘குஜராத் மாடல்’க்கு ஆதரவாக ஆக்ரோஷமாக வாதிடுகிறார். குஜராத்தில் உள்ள மைதானங்களில், உ.பி. ஆதித்யநாத்தின் பேரணி நடைபெறும் இடங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜே.சி.பி வாகனங்கள் வைக்கப்பட்டு, இரட்டை எஞ்சின் சர்க்கார் என்று முழக்கத்துடன் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதோடு, பாஜக தேர்தல் அறிக்கையானது உ.பி. போன்ற பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கான சட்டத்தை இயற்றுவதாக உறுதியளித்துள்ளது. இந்த சட்டத்துக்கு உ.பி-யில் கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அனைத்து நட்சத்திர தலைவர்களின் பிரச்சாரங்களும் கவனமாக திட்டமிடப்பட்டுள்ளன. உதாரணமாக, கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம் வாக்குகள் உள்ள இடங்களில் அல்லது குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்ற அல்லது தோல்வியடைந்த தொகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் ஆதித்யநாத் உரையாற்றினார். பா.ஜ.க வேட்பாளர் ஹர்திக் படேலை ஆதரித்து சூரத்தில் உள்ள பட்டிதார் சமூகத்தினர் செல்வாக்கு மிக்க வராச்சா மற்றும் விராம்கம் போன்ற இடங்களிலும் அவர் ரோட்ஷோ நடத்தினார். துவாரகையில் பெட் துவாரகை தீவில் கடந்த மாதம் - பெரும்பாலும் சிறுபான்மையினருக்கு சொந்தமான சொத்துக்களை இடித்ததற்காக, முதல்வர் பூபேந்திர படேலும், உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியும் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் போது பாஜக வேட்பாளர் பபுபா மானேக்கால் உ.பி. மாடலைக் குறிப்பிட்டு ஆதித்யநாத்தை கிட்டத்தட்ட கடவுளாக சித்தரித்தார். உ.பி., துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, குஜராத்தில், ஹிந்தியின் மையப்பகுதியிலிருந்து புலம்பெயர்ந்தோர் வசிக்கும் பகுதிகளில், கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்த சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி., இந்த பிரச்சாரம் எவ்வாறு ஹவுஸ் பெயின்டர்கள் போன்ற சமூகங்களையும் உள்ளடக்கியது என்பதை சுட்டிக்காட்டினார். “அகமதாபாத்தில் சீதாப்பூரைச் சேர்ந்த குறைந்தபட்சம் 500 குடும்பங்கள் பெயிண்டர் வேலை செய்கிறார்கள்” என்று அவர் கூறினார். ஆம் ஆத்மி கட்சியை (ஆம் ஆத்மி) குறிப்பிட்டு, ‘புதிய முன்னணி எழுவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று உ.பி.யைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.
பாஜ்பா பிச்டா வர்க் மோர்ச்சாவின் (பா.ஜ.க ஓ.பி.சி அணி) சீதாபூர் மாவட்டத் தலைவர் ராம்ஜீவன் ஜெய்ஸ்வால் கூறுகையில், “உ.பி.யில் இருந்து, 162 பா.ஜ.க-வினர் செப்டம்பர் மாதம் முதல் இங்கு முகாமிட்டுள்ளனர். தேர்தல் பணிகள் முடியும் வரை அவர்கள் இங்கே இருப்பார்கள்.” என்று கூறினார்.
2014-ம் ஆண்டில், பா.ஜ.க குஜராத்தில் இருந்து வாரணாசிக்கு ஒரு பெரிய குழுவை அனுப்பியது. அவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள் மற்றும் பட்டிதார் தலைவர்கள், அந்தந்த சமூகங்களைச் சென்றடையவும், அப்போது பிரதமர் வேட்பாளராக இருந்த மோடிக்கு பிரச்சாரம் செய்தவர்கள். 49 நாட்களுக்குப் பிறகு டெல்லி முதல்வர் பதவியில் இருந்து விலகிய அரவிந்த் கெஜ்ரிவால், அந்தத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், மோடியிடம் தோல்வியடைந்தார். 2018 ஆம் ஆண்டில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக, முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தன் ஜடாபியா, அக்கட்சியின் உ.பி., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி, குஜராத்திகள் உ.பி பிரச்சாரத்தில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தினார்கள் என்பதை நினைவு கூர்ந்தார். “வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதில் பெண்களின் ஆதரவைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். ஏனென்றால், பெண்கள் பர்தாவில் இருப்பார்கள். எங்கள் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வரும்போது வீட்டிற்குள் ஓடுவார்கள். ஆனால், குஜராத்தி பெண்கள் வந்தபோது, அவர்கள் பிரச்சாரத்தில் அவர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல், பெண்களின் வெற்றிகரமான பேரணியையும் நடத்தினர்- இது உ.பி.க்கு முன்னெப்போதும் இல்லாத முன்மாதிரியானது.” என்று கூறினார்.
வி.ஐ.பி தலைவர்களுக்கு முன்பு, குஜராத் பா.ஜ.க-வின் தலைவர் சி.ஆர் பாட்டீலுக்குப் பிறகு இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜடாபியா, ஐந்து வழிகளில் 144 தொகுதிகளில் குஜராத் கௌரவ் யாத்திரையைத் திட்டமிட்டுள்ளார். மிக நீளமான பழங்குடிப் பகுதியைக் கடந்து செல்கிறது. ஆதிவாசி கௌரவ யாத்ரா என்று அழைக்கப்படுகிறது. “இந்த யாத்திரை மற்ற யாத்திரைகளில் இருந்து வேறுபட்டது. ஏனெனில் இது, நகரப் பகுதிகளை ஒதுக்கிவிட்டு நடத்தப்பட்ட, முந்தைய தலைவரால் நடத்தப்பட்ட யாத்திரையைப் போல இல்லாமல், இது பல தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களைக் கொண்டுள்ளது” என்று ஜடாபியா கூறினார்.
மோடிக்கு அடுத்து, ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று கூட்டங்கள் ஒரு சாலை வழியான பிரச்சாரம் என திட்டமிட்டப்பட்டுள்லது. ஞாயிற்றுக்கிழமை அன்று சூரத்தின் பட்டிதார் செல்வாக்கு மிக்க பகுதியில் ஆம் ஆத்மி கட்சி கடும் போட்டியைக் கொடுக்கும் வாரச்சாவில் மோடியின் கூட்டத்துக்கு முன்னதாக 15-ம் தேதி 15 கிமீ பிளஸ் ரோட்ஷோ நடைபெறும். கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்கிறார். அதே நாளில், வைர நகரத்தில் டவுன்ஹால் கூட்டத்தை நடத்துகிறர். புதிய கட்சியான ஆம் ஆத்மி குஜராத்தில் தனது பலத்தைக் காட்டுகிறது. டகங்களிடம் பேசிய பாட்டீல் பிரதமர் நரேந்திர மோடியை பா.ஜ.க-வின்‘பிரம்மாஸ்திரம்’ என்று வர்ணித்தார்.
பா.ஜ.க அமைச்சர் ஒருவர் கூறியது போல், “இந்தத் தேர்தல் எதிர்க்கட்சிக்கு 2024-ம் ஆண்டு தேர்தலுக்கான அரை இறுதி தேர்தல்” ஆகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.