”குஜராத்தை அவமானப்படுத்திய மணிசங்கர் ஐயர் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளிடம் ரகசிய கூட்டம் நடத்தியது ஏன்”, என பிரதமர் நரேந்திரமோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைக்கு நேற்று (சனிக்கிழமை) 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, 14-ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்காக, பிரதமர் நரேந்திரமோடி, பாலன்பூர், சனாந்த், கலோல், வதோதரா ஆகிய பகுதிகளிலும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கேதா, பனாஸ்கந்தா ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பிரச்சாரத்திக் பேசிய ராகுல்காந்தி, தொழிலதிபர்களின் கைகளில் சிக்கியுள்ள பெரும் பணம், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலனுக்காக செலவிடப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும், அவர் கூறினார். “இந்த நாட்டில் திருடர்களின் கைகளில் இருந்த பணம் முழுதும் பிரதமர் மோடியால் வெள்ளை பணமாக்கப்பட்டிருக்கிறது”, என ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
அதேபோல், பிரச்சாரத்தில் பேசிய நரேந்திரமோடி, “”குஜராத்தை அவமானப்படுத்திய மணிசங்கர் ஐயர் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளிடம் ரகசிய கூட்டம் நடத்தியது ஏன்?”, என கேள்வி எழுப்பினார்.