குஜராத் தேர்தலை முன்னிட்டு ஊடகத்துடன் பேசிய பட்டேல் சமூகத்தின் தலைவர் ஹர்திக் படேல், பட்டிடர் சமூகத்திற்கு ஒபிசிக்கு சமமாக காங்கிரஸ் ஒதுக்கீடு செய்யும் உறுதியை நாங்கள் ஏற்று கொள்கிறோம் என தெரிவித்தார்.
பட்டிடர் அனமத் அந்தோலன் சமித்தி கட்சியின் தலைவரான ஹர்திக் படேல் வரும் குஜராத் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். “ஒதுக்கீடு இல்லா பிரிவுக்கு ஒபிசிக்கு சமமாக ஒதுக்கீடு அளிப்போம் என காங்கிரஸ் கூறியுள்ளது. இதை நாங்கள் ஏற்று கொள்கிறோம்” என அவர் பேட்டியின் பொது தெரிவித்திருந்தார். மேலும் பேசிய அவர் “காங்கிரஸ் எங்களுக்கு சொந்தம் இல்லை. ஆனால் அவர்கள் எங்கள் உரிமைக்காக பேசும்பொழுது நாங்கள் அதை கேட்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர்கள் அளித்த உறுதி நம்பத்தக்கது” என கூறினார்.
காங்கிரஸ் எங்களுக்கு அளித்த உறுதியின் படி “ஒதுக்கீடு செய்யப்படாத சமூகத்திற்கு ஒதுக்கீடு தரப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் சொல்கிறது. காங்கிரஸ் எங்கள் கோரிக்கையை ஏற்று பிரிவு என் 31 மற்றும் 46 ன் விதிகளின் கீழ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒதிக்கீடு செய்வதாக தெரிவித்துள்ளது” என்றார்.
மேலும் அவர் பட்டிடர் காங்கிரஸுக்கு முழுவதுமாக ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் பிஜேபிக்கு எதிர்த்து நிற்பதால் காங்கிரஸுக்கு சாதகமாக அமையும் என்றார். “நாங்கள் பிஜேபியை எதிர்த்து நிற்பதால் நேராகவோ மறைமுகமாகவோ எங்கள் ஆதரவு காங்கிரஸுக்கு செல்கிறது” என்றார்.
வரும் சட்ட மன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், கூட்டணியில் எந்த இடத்தையும் தான் கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். “காங்கிரசிற்கு வாக்களிக்க வேண்டும் என நாங்கள் யாரையும் அணுக வில்லை. அவர்கள் எங்கள் உரிமைக்கு குரல் கொடுக்கிறார்கள், அதனால் மக்களே எது சரி என்று தீர்மானிப்பார்கள்” என அவர் முடித்துக்கொண்டார்.