குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்: குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5 திங்கட்கிழமை முடிவடைந்துள்ளது டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்த குஜராத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்படும்.
இமாச்சல பிரதேசத்தில் 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பாரதிய ஜனதா கட்சி (BJP) முன்னுதாரணத்தை முறியடித்து மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்புகிறது, அதேநேரம் காங்கிரஸ் தேர்தல் மறுமலர்ச்சியை எதிர்பார்க்கிறது. குஜராத்தில், பா.ஜ.க., அருகி வரும் காங்கிரஸுடனும், புதிதாக நுழைந்த ஆம் ஆத்மி கட்சியுடனும் மும்முனைப் போரில் ஈடுபட்டுள்ளது.
TV9 கருத்துக்கணிப்பு: குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெறும்
குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) 125-130 இடங்களிலும், காங்கிரஸ் 30-40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று TV9க்கான கருத்துக்கணிப்பு திங்களன்று கணித்துள்ளது. அதேசமயம், ஆம் ஆத்மி கட்சி 3-5 இடங்களிலும் மற்றவை 3-7 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் பா.ஜ.க வெற்றி பெறும் - ஜான் கி பாத்
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க 117 முதல் 140 இடங்களைப் பெறும் என்றும், காங்கிரஸ் 34 முதல் 51 இடங்களைப் பெறும் என்றும் ஜன் கி பாத் திங்கள்கிழமை கணித்துள்ளது. அதேசமயம், ஆம் ஆத்மி கட்சி 6 முதல் 13 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் 128-148 இடங்கள் வரை பா.ஜ.க வெற்றி பெறும் – பி-மார்க் கணிப்பு
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க 128 முதல் 148 இடங்களைக் கைப்பற்றும் என பி-மார்க் கருத்துக்கணிப்பு திங்கள்கிழமை கணித்துள்ளது. காங்கிரஸ் 30 முதல் 42 இடங்களையும், ஆம் ஆத்மி 2 முதல் 10 இடங்களையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்.டி.டி.வி
பாஜக: 128
காங்கிரஸ் (INC): 44
ஆம் ஆத்மி (AAP): 7
மற்றவை: 3
நியூஸ்18
பாஜக: 117-140
காங்கிரஸ் (INC): 34-51
ஆம் ஆத்மி (AAP): 6-13
மற்றவை: 0
ரிபப்ளிக் டிவி
பாஜக: 128 - 148
காங்கிரஸ் (INC): 30-42
ஆம் ஆத்மி (AAP): 2-10
மற்றவை: 0-3
நியூஸ் எக்ஸ்
பாஜக: 117-140
காங்கிரஸ் (INC): 34-51
ஆம் ஆத்மி (AAP): 6-13
மற்றவை: 0
இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க வெற்றி பெறும்; ETG கணிப்பு
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 38 இடங்களைக் கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 28 இடங்களைக் கைப்பற்றும் என்றும் ETG கருத்துக்கணிப்பு கணித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த இடமும் கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இமாச்சல பிரதேசம் | பா.ஜ.க 32-40 இடங்களில் முன்னிலை பெறும் : நியூஸ்எக்ஸ் கணிப்பு
நியூஸ்எக்ஸ் கருத்துக்கணிப்பு, ஹிமாச்சல பிரதேசத்தில் முன்னோடியில்லாத வகையில் இரண்டாவது முறையாக பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணித்துள்ளது. பா.ஜ.க 32-40 இடங்களிலும், காங்கிரஸ் 27-34 இடங்களிலும் வெற்றி பெறும் என நியூஸ்எக்ஸ் கணித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு 0 இடங்கள் கிடைத்துள்ளன.
ஹிமாச்சலில் பா.ஜ.க வெற்றி பெறும் : BARC கணிப்பு
BARC நடத்திய கருத்துக்கணிப்பு இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. முடிவுகள் இங்கே:
பாஜக: 35-40
காங்கிரஸ் (INC): 20-25
ஆம் ஆத்மி (AAP): 0-3
மற்றவை: 1-5
ரிபப்ளிக் டி.வி
பாஜக: 34-39
காங்கிரஸ் (INC): 28-33
ஆம் ஆத்மி (AAP): 0-1
மற்றவை: 1-4
டைம்ஸ் நவ்
பாஜக: 38
காங்கிரஸ் (INC): 28
ஆம் ஆத்மி (AAP): 0
மற்றவை: 2
இந்தியா டிவி
பாஜக: 15-19
காங்கிரஸ் (INC): 14-18
ஆம் ஆத்மி (AAP): 0
மற்றவை: 0-2
ஜீ நியூஸ்
பாஜக: 35-40
காங்கிரஸ் (INC): 20-25
ஆம் ஆத்மி (AAP): 0-3
மற்றவை: 1-5
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு தரவுகள் வெளியான பிறகு, குஜராத்தில் பா.ஜ.க அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று மாநில பா.ஜ.க தலைவர் சி.ஆர் பாட்டீல் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் வெளியான பிறகு திங்களன்று முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், பா.ஜ.க.,வின் ஆய்வின்படி, அக்கட்சி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். பல கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க ஆட்சி அமைப்பதைக் காட்டுகின்றன, ஒருசில கருத்துக் கணிப்புகளில் இழுபறி நிலவுகிறது. டிசம்பர் 8-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். எங்கள் ஆய்வின்படி பா.ஜ.க பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைப்பதற்கு முழு வாய்ப்பு உள்ளது," என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.