குஜராத் வேளாண் துறை அமைச்சர் ராகவ்ஜி பட்டேல், உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் அவருக்கு வழங்கப்பட்ட மதுபானத்தை தவறுதலாக குடித்த வீடியோ வைராகி வருகிறது. இந்நிலையில் இது தெரியாமல் நடந்துவிட்டதாக அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத், நர்மதாவில் உள்ள டெடியாபடா தாலுக்காவில், உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, அங்குள்ள பழங்குடியினர் சிறப்பு விழாவை நடத்தினர். இந்நிலையில் பூமித் தாய்க்கு படையலிட்டு வணங்கும், இவ்விழாவில் பழங்குடியின சாமியார், சாவ்தூ வசவ காட்டு இலைகள், நெற் பயிர்கள், தேங்காய், பச்சை நிற கண்ணாடி பாட்டிலில் மதுபானத்தையும் வழங்கினார்.
இந்நிலையில் இந்த விழாவில் குஜராத வேளாண் துறை அமைச்சர் ராகவ்ஜி பட்டேல், டெடியாபடாவின் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மோடிலால் வசவ, நர்மதா மாவட்ட பாஜக தலைவர் சங்கர் வசவ மற்றும் அப்பகுதி அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்ற அனைவரும் பழங்கிடியின சாமியார் சொல்வது போல் கேட்டனர். இந்நிலையில் அனைவருக்கும் இலையால் செய்யப்பட்ட பச்சை நிற கோப்பை வழங்கப்பட்டது. இதில் சாமியார் மதுபானத்தை ஊறினார். இதைத் தொடர்ந்து ராகவ்ஜி பட்டேல் அதை குடிக்க தொடங்கினார். இந்நிலையில் மோடிலால் மற்றும் சங்கர் இருவரும், இதை குடிக்கக்கூடாது என்று அமைச்சரிடம் கூறினார்கள்.
’இதை நீங்கள் முன்பே என்னிடம் கூறியிருக்க வேண்டும்’ என்று அமைச்சர் கூறினார். உடனே அவர் இலையினால் செய்யப்பட்ட கப்பை கீழே போட்டுவிட்டார். இந்நிலையில் சுற்றி இருந்த தலைவர்கள் இதை பார்த்து சிரித்தனர்.
இந்நிலையில் இந்த வீடியோ மிகவும் வைராகி வருகிறது. இது தொடர்பாக ராகவ்ஜி பட்டேல் பேசுகையில் “ பழங்குடியினர் கலாச்சாரம் தொடர்பாக எந்த தகவலும் எனக்கு தெரியாது. இந்நிலையில் எங்கள் சடங்குகளில் புனித தீர்த்தம் தருவார்கள். அதை நாங்கள் பருகுவோம். அப்படித்தான் இதையும் நினைத்தேன் “ என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“