அதிதி ராஜா, சோஹினி கோஷ், கோபால் பி கட்டேஷியா
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் படுதோல்வியில் இருந்து தெரியவந்து ஒன்று, முன்பு போல சிறுபான்மையினரின் வாக்குகள் இப்போது கட்சிக்கு கிடைக்கவில்லை.
குஜராத்தில் பல முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் – 2017 இல் வெற்றி பெற்ற மூவர்தான் 1995 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டசபைக்குள் நுழைந்தவர்கள். அப்போது காங்கிரஸ் பல தொகுதிகளில் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்று வந்தது.
ஆனால் சமீபத்திய தேர்தலில், 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற இடங்களை இழந்ததோடு மட்டுமல்லாமல், அதன் சில கோட்டைகளில் இழப்புகளையும் சந்தித்ததன் மூலம், இந்த முறை மாறியதாகத் தெரிகிறது. அவற்றில் பல கணிசமான முஸ்லிம் மக்கள்தொகை கொண்டவை. இதில் பல தொகுதிகளில் காங்கிரஸின் வாக்குகள் கிட்டத்தட்ட 10 சதவீதம் குறைந்துள்ளது.
அகமதாபாத்தில் ஜமால்பூர்-காடியாவைத் தக்க வைத்துக் கொண்ட காங்கிரஸின் இம்ரான் கெடவாலா மட்டுமே இப்போது குஜராத் மாநிலத்தின் ஒரே முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர். இருப்பினும், இம்முறை கெடவாலாவின் வெற்றி வித்தியாசம் 29,000 வாக்குகளில் இருந்து 13,600 ஆக குறைந்தது.
ஆம் ஆத்மி கட்சியும் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீனும் தனது வாக்கு வித்தியாசத்தையும், வாக்குப் பங்கையும் பாதிக்கும் என்று எம்எல்ஏ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அதன்படி தேர்தலில் அவரது வாக்கு 58 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக சரிந்தது.
காங்கிரஸ் எந்தளவுக்கு சிக்கலில் உள்ளது என்பதையும் சில இடங்கள் காட்டின:
ஜம்புசார் (பரூச் மாவட்டம்): இங்கு 31.25 சதவீதம் முஸ்லிம் வாக்காளர்கள்.
இங்கு காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ சஞ்சய் சோலங்கி 39.07 சதவீத வாக்குகள் பெற்றார். இது 46.71 சதவீதத்தில் இருந்து குறைந்துள்ளது. அதே நேரத்தில் பாஜகவின் தேவகிஷோர்தாஸ்ஜி பக்திஸ்வரூப்தாஸ்ஜி சுவாமி, 42.62 சதவீதத்திலிருந்து 55.74 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
தரியாபூர் (அகமதாபாத் மாவட்டம்): இந்த தொகுதியில் 46 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர், 2012ல் எல்லை நிர்ணயம் செய்ததில் இருந்து காங்கிரஸ் கட்சியே அதை தக்க வைத்துள்ளது. ஆனால் இப்போது அக்கட்சியின் வாக்கு சதவீதம் 50 சதவீதத்தில் இருந்து 44.67 சதவீதமாக குறைந்துள்ளது, அதே நேரத்தில் பாஜக 45.14 சதவீதத்தில் இருந்து 49.05 சதவீதமாக உயர்ந்துள்ளது. எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, 1990 முதல் பாஜக அந்த இடத்தைப் பிடித்திருந்தது.
மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் கியாசுதீன் ஷேக், வழக்கமான 68-70 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் இந்த முறை 62 சதவீதமாகக் குறைந்துள்ளனர். ஆம் ஆத்மி மற்றும் ஏஐஎம்ஐஎம் தனது ஆதரவு தளத்தை அரித்துவிட்டதாக அவர் கூறினார்.
தரியாபூரில், நான் கிட்டத்தட்ட 12,000-15,000 இந்து வாக்குகளையும் மேலும் 50,000 முஸ்லிம் வாக்குகளையும் பெறுவேன். இம்முறை இந்து மற்றும் முஸ்லிம் வாக்குகள் பிரிந்தது. என்னுடையது போன்ற ஒரு தொகுதியில் வாக்காளர்களை பிரிப்பது எளிது. இதன் மற்றொரு உதாரணம் வான்கனேர் தொகுதி, அங்கு மஹ்மத் ஜாவேத் பிர்சாதா (2017 இல் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்) கோலி வாக்காளர் தளத்தை தக்கவைத்து முஸ்லிம் வாக்குகளை இழந்தார் என்றார்.
தாஹோத் மற்றும் ஜலோத் (தாஹோட் மாவட்டம்): இங்கு காங்கிரஸ் தனது இரண்டு கோட்டைகளையும் இழந்தது. தாஹோதில் 14 சதவீத முஸ்லிம் வாக்குகள் உள்ளன. ஆனால் இந்த தேர்தலில் அதன் வாக்கு விகிதம் 52.16 சதவீதத்தில் இருந்து 25.95 சதவீதமாகக் குறைந்துள்ளது.
வெற்றி பெற்ற பாஜகவின் வாக்கு சதவீதம் 42.03 சதவீதத்தில் இருந்து 43.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 20 சதவீத வாக்குகளைப் பெற்று காங்கிரஸை சேதப்படுத்தியது.
ஜலோத் தொகுதியில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஆளும் கட்சியின் வாக்கு சதவீதம் 39.91 சதவீதத்தில் இருந்து 51.41 சதவீதமாக உயர்ந்தாலும், ஆம் ஆத்மி கட்சி கணிசமான வாக்குகளை (29.53 சதவீதம்) எடுத்துக்கொண்டது.
இதுகுறித்து மூத்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், தாஹோத் தொகுதியில், முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் கூட பாஜகவுக்கு வாக்களித்தது. ஆனால் இம்முறை ஆம் ஆத்மி கட்சிதான் தாஹோத் தொகுதிகளில் காங்கிரஸுக்கு போட்டியாக இருந்தது, கூடுதலாக சிட்டிங் எம்.எல்.ஏ.க்களை மாற்றியது.
கம்பாலியா மற்றும் மங்ரோல் (சௌராஷ்டிரா): கணிசமான முஸ்லீம் வாக்குகளுடன் சௌராஷ்டிராவில் இந்த இடங்களை காங்கிரஸ் இழந்தது. சிறுபான்மை சமூகத்தினர், தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள கம்பாலியாவில் 16.5 சதவீத வாக்காளர்களும், ஜுனாகத் மாவட்டம் மங்ரோலில் 16.98 சதவீதமும் உள்ளனர்.
குறிப்பிடத்தக்க முஸ்லீம் வாக்கு கொண்ட சாலயா தொகுதியில் காங்கிரஸ் வாக்கு சதவீதத்தை பாதியாகக் குறைத்த ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வியால், சிட்டிங் எம்எல்ஏ விக்ரம் மேடத்தின் வாய்ப்புகள் பறிபோனது.
பொதுவாக, நான் சாலயா மற்றும் பாஜகவிடம் இருந்து 12,000 வாக்குகள் 1,500 வாக்குகளைப் பெறுவேன். ஆனால் இந்தத் தேர்தலில் எனக்கு 6,500 வாக்குகள் மட்டுமே கிடைத்தன, அதற்கு இணையான வாக்குகள் இசுடனுக்குப் போனது. பாஜகவின் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்தது. முஸ்லிம்களில் உள்ள ஏழைகளிலும் ஏழைகள், இலவசங்கள் என்ற வாக்குறுதியால் ஏமாந்தனர் என்று விக்ரம் மேடம் கூறினார்.
மங்ரோலில், காங்கிரஸின் தற்போதைய எம்எல்ஏ பாபு வாஜா 22,508 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பகவான்ஜி கர்கடியாவிடம் தோல்வியடைந்தார். ஆம் ஆத்மி கட்சியின் பியூஷ் பர்மர் 23.22 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்தார். AIMIM வேட்பாளர் 10,789 வாக்குகள் பெற்றார்.
எங்களின் உறுதியான வாக்குகளில் ஒரு பகுதியை நாங்கள் AIMIM இடம் இழந்த நிலையில், சிறுபான்மை சமூகத்தில் உள்ள ஏழை எளியவர்களின் சுமார் 4,000 வாக்குகளை ஆம் ஆத்மி பறித்தது. காத்வி அடுத்த முதல்வர் ஆகப் போகிறார் என்ற ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதியை நம்பியதால், மால்தாரிகளும் (மாடு வளர்ப்பவர்கள்) ஆம் ஆத்மிக்கு பெருமளவில் வாக்களித்தனர் என்று பாபு வாஜா கூறினார்.
கேடா மாவட்டத்தில், 13-18 சதவீத முஸ்லிம் வாக்குகளைக் கொண்ட மஹுதா, தஸ்ரா மற்றும் கபத்வஞ்ச் ஆகிய தொகுதிகளையும் காங்கிரஸ் இழந்தது. கேடா மாவட்டத்தில் பாஜக வெற்றி பெற்றது. நிச்சயமாக, சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பெரும்பாலான பகுதிகளில் காங்கிரஸ் அதன் அடையாள நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. இது காங்கிரஸின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின்மையே தெரிகிறது.
ஆனந்த் மாவட்டத்தில் உள்ள காம்பத் மட்டும்தான், சிறுபான்மை வாக்குகள் காங்கிரஸுக்கு உதவிய ஒரே தொகுதி, அங்கு 11 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியை பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி கடும் போட்டியுடன் கைப்பற்றியது. அது 43.53 சதவீத வாக்குகளையும், பாஜக குறைவாக வந்து 41.19 சதவீத வாக்குகளையும் பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“