குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது பரப்புரையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள நிலையில், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநிலத்தின் கூட்ச் மற்றும் சௌராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பரப்புரையில் ஈடுபட்டார்.
அந்தப் பகுதிகளில் 5 நாள்களில் 11 சாலை பேரணிகளை நடத்தினார். அப்போது, “எந்தக் கட்சியும் உங்களிடத்தில் கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், மின்சாரம் பற்றி பேசுவதில்லை. ஆனால் ஆம் ஆத்மி பேசும்” என்றார்.
இதையும் படியுங்கள்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் ஜாமீனில் விடுதலை; அவரது கைது ’சூனிய வேட்டை’ என நீதிமன்றம் விமர்சனம்
மேலும், “உங்களின் குடும்பங்கள், வேலைவாய்ப்பு, தனிநபர் வளர்ச்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும்” என்றார். முன்னதாக ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளராக வெள்ளிக்கிழமை கட்சியின் பொதுச் செயலாளர் இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டார். சௌராஷ்டிராவை சேர்ந்த இசுதன் காத்வி, புனித பூமியாக கருதப்படும் துவாரகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த நிலையில், சௌராஷ்டிராவைச் சேர்ந்த அதன் தேசிய இணைச் செயலாளரும், ராஜ்கோட்டின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இந்திரனில் ராஜ்யகுரு, முதல்வர் வேட்பாளராக காத்வி அறிவிக்கப்பட்டவுடன் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜினாமா செய்து காங்கிரஸ் திரும்பினார்.
அப்போது தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அவர் கூறுகையில், “பாரதிய ஜனதா கட்சிக்கு உதவும் வகையில் பலவீனமான வேட்பாளர்களுக்கு ஆம் ஆத்மி டிக்கெட் கொடுக்க முயன்றது” என்றார்.
2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கூட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களில் பாஜக செல்வாக்கு இழந்து காணப்பட்டது. கடந்த தேர்தலில் இந்தப் பகுதிகளில் பாஜகவை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
அதாவது, அப்பகுதியில் மொத்தமுள்ள 54 தொகுதிகளில் பாஜகவுக்கு 23 இடங்கள் மட்டுமே கிடைத்தன. காங்கிரஸ் 30 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஒரு இடத்தை தேசியவாத காங்கிரஸ் பிடித்திருந்தது. இந்தப் பகுதிகளில் விவசாயிகள் நெருக்கடி மற்றும் பட்டேல் சமூகத்தினரின் கோபம் ஆகியவை பாஜகவுக்கு எதிராக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த ஆண்டு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சந்தையில் உரிய விலை கிடைப்பது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2017 ஆம் ஆண்டில், பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) இன் கீழ் தீர்க்கப்படாத காப்பீட்டுக் கோரிக்கைகளும் மோசமான வானிலை காரணமாக பயிர் இழப்பை சந்தித்தவர்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியது. 2020 ஆம் ஆண்டில், நிறுவனங்கள் அதிக பிரீமியத்தை மேற்கோள் காட்டுகின்றன என்ற அடிப்படையில் குஜராத் இந்தத் திட்டத்திலிருந்து விலகியது.
இந்த நிலையில், கடந்த முறை சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் அதன் சிறப்பான செயல்திறனில் பிரதிபலித்த படிதார் ஆதரவை ஆம் ஆத்மியால் ஓரளவு பெற முடிந்தது.
இதற்கிடையில், கெஜ்ரிவாலின் ஐந்து நாள் சுற்றுப்பயணத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு மூன்று பேரணிகள் இடம்பெற்றன.
பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகருமான பகவந்த் மான், மத்திய குஜராத் மற்றும் அகமதாபாத் பகுதிகளில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மீனவர்கள் மத்தியில் பேசுகையில், அவர்களை கவரும் வகையில் சில வாக்குறுதிகளை வழங்கினார். அப்போது நீங்கள், எந்த ஒரு இடைத்தரகருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை… டீசலுக்கு 25% மானியம் தருவோம். வட்டியில்லா கடன் வழங்குவோம்” என்றார்.
மேலும், மீன்களுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலை, மீனவர்களுக்கு வீடுகள், விபத்தில் இறப்பவர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
தொடர்ந்து, மோர்பி மேம்பால விபத்துக்கு காரணமான பராமரிப்பு நிறுவனத்தை பாஜக காப்பாற்றுகிறது எனவும் குற்றஞ்சாட்டினார். இருப்பினும், ஓரேவா குழுமத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை.
மேலும் அவர் கூறுகையில், “ஏழு ஆண்டுகளாக நான் டெல்லியின் முதலமைச்சராக இருந்தேன். ஆனால் எனது வங்கிக் கணக்கு காலியாக உள்ளது. எனது கட்சியின் வங்கிக் கணக்கும் காலியாக உள்ளது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil