ஜமால்பூர் கெடா தொகுதியில் இருந்து இம்ரான் கெடவாலா குஜராத்தில் உள்ள ஒரே முஸ்லிம் எம்.எல்.ஏ ஆவார். (Facebook: Imran Khedawala)
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 182 உறுப்பினர்களைக் கொண்ட 15வது குஜராத் சட்டமன்றத்தில் ஒரே முஸ்லீம் உறுப்பினர் இம்ரான் கெடவாலா ஆவார். அகமதாபாத்தின் ஜமால்பூர்-காடியா தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆன கெடவாலா 13,658 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Advertisment
குஜராத் மக்கள் தொகையில் 9.67 சதவீதம் முஸ்லிம் சமூகம் ஆகும். 14வது குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.
இப்படி சட்டமன்றங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இல்லாதது குஜராத்திலோ அல்லது பாஜக ஆளும் மாநிலங்களிலோ மட்டும் அல்ல.
தற்போது, மக்களவையில் மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் 26 முஸ்லிம்கள் உள்ளனர் - நாட்டின் மக்கள்தொகையில் 14.7 சதவீத பங்கிற்கு எதிராக, அவர்களின் பிரதிநிதித்துவம் 4.78 சதவீதமாக உள்ளது,
Advertisment
Advertisements
மக்களவையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் முஸ்லீம் எம்.பி.க்களின் அதிகபட்ச பிரதிநிதித்துவம் கொண்டுள்ளது. இந்த கட்சியில் ஐந்து முஸ்லீம் எம்.பி.க்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ், 4 எம்.பி.க்களை கொண்டுள்ளது. பாஜகவுக்கு ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை.
இதை ஒப்பிடுகையில் நாட்டின் மொத்தமுள்ள 4,029 சட்டமன்றத் தொகுதிகளில் 5.78 சதவீதத்தைக் கொண்டு, அனைத்து மாநிலங்களிலும் 233 எம்எல்ஏக்களுடன், சட்டப் பேரவைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் சற்று சிறப்பாக உள்ளது.
அதிக முஸ்லிம் எம்எல்ஏக்கள் காங்கிரசை சேர்ந்தவர்கள், இதில் 54 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் 43, சமாஜ்வாதி கட்சி 31 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ளது. பாஜகவுக்கு ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லை.
பல்வேறு கட்சிகளில் உள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள்/எம்.பி.க்கள்/எம்.எல்.சி.க்கள்
சமீபத்திய ஆண்டுகளில் பாஜகவின் கடைசி முஸ்லீம் எம்எல்ஏ அமினுல் ஹக் லஸ்கர் ஆவார், அவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் அசாமில் சோனாய் தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால், 2021 தேர்தலில் அவர் தனது இடத்தைத் தக்கவைக்கத் தவறிவிட்டார்.
முஸ்லீம் சமூகத்தினருக்கு சட்ட சபைகளில் பிரதிநிதித்துவம் வழங்குவதில் பாஜக சிறப்பாக செயல்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் உட்பட இந்தியாவில் உள்ள ஆறு மாநிலங்களில் 426 இடங்களைக் கொண்ட சட்டமன்றக் குழுக்கள் உள்ளன. இவர்களில் 27 பேர் முஸ்லிம்கள் அல்லது மொத்தத்தில் 6.33 சதவீதம் பேர்.
பிஜேபி மற்றும் காங்கிரஸில் தலா 4 பேர் என அதிக முஸ்லிம் எம்எல்சிகள் உள்ளனர். பீகாரைச் சேர்ந்த ஷாநவாஸ் உசேன் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த டேனிஷ் ஆசாத் அன்சாரி, புக்கல் நவாப் மற்றும் மொஹ்சின் ராசா ஆகியோர் பாஜக எம்எல்சிகளாக உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“