அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கவுன்ட் டவுனில் சுருதியை உயர்த்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்தில் “வகுப்புவாதக் கலவரங்களில் ஈடுபடுபவர்களுக்கு” 2002ல் “அத்தகைய பாடம் கற்பிக்கப்பட்டது” அது பா.ஜ.க.,வின் கீழ் மாநிலத்தில் “அகந்த் சாந்தி” (நித்திய அமைதி)க்கு வழிவகுத்தது என்று வெள்ளிக்கிழமை கூறினார்.
2002 ஆம் ஆண்டில், கோத்ராவில் அயோத்தி கரசேவகர்கள் நிரம்பியிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் கோச் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த வகுப்புவாத கலவரத்தில் குஜராத்தில் பெரிய அளவிலான வன்முறை ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்: குஜராத் தேர்தல்; ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் முன் உள்ள சவால்கள்
தற்போது காங்கிரஸ் வசம் உள்ள கேதா மாவட்டத்தில் உள்ள மஹுதா தொகுதியில் ஒரு பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, 2002ல், காங்கிரஸ்காரர்கள் அதை ஒரு பழக்கமாக மாற்றியதால் தான் வகுப்புக் கலவரங்கள் நடந்தன. ஆனால் 2002ல் இருந்து 2022 வரை மீண்டும் நடக்காததற்கான பாடம் 2002ல் கற்பிக்கப்பட்டது.
“குஜராத்தில் வகுப்புவாத கலவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பா.ஜ.க அரசால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இது குஜராத்தில் நித்திய அமைதியை நிலைநாட்டியுள்ளது,” என்று அமித் ஷா கூறினார்.
நவம்பர் 22 அன்று பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசாவில் நடந்த தேர்தல் உரையில் அமித் ஷா 2002 கலவரங்கள் பற்றி குறிப்பிட்டார். “2001ல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தார், 2002க்குப் பிறகு எங்கும் ஊரடங்கு உத்தரவு போட வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. அனைவரும் அவரவர் இடத்தில் இருந்தனர். இப்போது மாஃபியா இருக்கிறதா? தாதா (குண்டர்) இருக்கிறாரா?” என்று அமித் ஷா கூட்டத்தில் பேசியிருந்தார்.
வெள்ளியன்று, அமித் ஷா தாஹோடில் ஜலோட் மற்றும் பருச்சில் வக்ராவில் பொதுக் கூட்டங்களில் உரையாற்றும் போது 2002 ஐ மீண்டும் குறிப்பிட்டார்.
“காங்கிரஸ் ஆட்சியின் போது (குஜராத்தில்), வகுப்புவாத கலவரங்கள் நடக்கவில்லையா? 2002ல், நரேந்திர மோடியின் ஆட்சியின் போது (அப்போதைய குஜராத் முதல்வர்) அவர்கள் அதையே செய்ய முயன்றனர். இப்போது 2022 ஆகிவிட்டது, யாரும் தலை தூக்கவில்லை என்ற பாடம் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. வகுப்புவாத கலவரங்களை ஏற்பாடு செய்தவர்கள் குஜராத்திற்கு வெளியே சென்றுவிட்டனர். பா.ஜ.க குஜராத்தில் அமைதியை நிலைநாட்டியது மற்றும் ஊரடங்கு உத்தரவு இல்லாத பிராந்தியமாக மாற்றியது, ”என்று ஜாலோடில் பழங்குடியினர் கலந்துக் கொண்ட கூட்டத்தில் அமித் ஷா கூறினார்.
கணிசமான அளவு முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட வாக்ராவில், “இந்த நிலம் நிறைய வகுப்புவாத கலவரங்களைக் கண்டுள்ளது, ஊரடங்கு உத்தரவு மற்றும் தாக்குதல்கள் இருந்தன. இத்தகைய சூழ்நிலையில் வளர்ச்சி எப்படி நடக்கும்? 2002 இல், இந்த மக்கள் கடைசியாக தைரியத்தை வெளிப்படுத்தினர். அந்தக் காலத்தில் இப்படி ஒரு பாடம் கற்பிக்கப்பட்டது. ஒவ்வொருவராக வரிசைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 20 வருடங்கள் ஆகிவிட்டன, ஒருமுறை கூட ஊரடங்கு உத்தரவை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை,” என்று அமித் ஷா கூறினார்.
”பா.ஜ.க.,வின் தாமரை குஜராத்தை வகுப்புவாத கலவரத்தில் இருந்து காப்பாற்றி வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றது,” என்று அமித் ஷா கூறினார்.
அஹமதாபாத் நகரின் நரோடா தொகுதியில் மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, குஜராத்தில் அமைதியை நிலைநாட்டுவது பற்றி பேச எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு உரிமை இல்லை என்று கூறினார்.
“காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தது. வகுப்புவாத கலவரங்கள் மூலம் குஜராத்தை சீரழித்தவர்கள் யாரேனும் இருந்தால், அது காங்கிரஸார் தான்… வகுப்புவாத கலவரங்களை (இப்போது) செய்ய யாருக்கும் தைரியம் இல்லை” என்று அமித் ஷா கூறினார். அமித் ஷா, 2002 நரோடா பாட்டியா படுகொலை குற்றத்தில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள மனோஜ் குக்ரானியின் மகள் பாயல் குக்ரானிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
“2002ல், ஒரு தவறு நடந்தது… பா.ஜ.க அரசு சட்டத்தின் கயிற்றை மிகவும் கடுமையாக இறுக்கியது, கலவரம் செய்பவர்களுக்கு பாடம் கற்பித்தது,” என்று அமித் ஷா கூறினார்.
காங்கிரஸை மேலும் குறிவைத்து, அமித் ஷா, ஜம்மு காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்யவில்லை அல்லது அதன் வாக்கு வங்கிக்கு பயந்து “நமது நம்பிக்கையை” வலுப்படுத்தவில்லை என்று கூறினார். “காங்கிரஸ் மக்கள் அதன் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படலாம், ஆனால் பா.ஜ.க.,வினர் அல்ல. அவர்களின் வாக்கு வங்கி என்ன தெரியுமா?” அமித் ஷா கேள்வியை ஒன்றுக்கு மேற்பட்ட முறை திரும்பத் திரும்பச் சொன்னார், பார்வையாளர்கள் உறுதிமொழியாக பதிலளித்ததால், “அப்படியானால், நான் அதை உச்சரிக்கவில்லை,” என்று கூறினார்.
முன்னதாக மஹுதாவில், ராகுல் காந்தியையும் அமித் ஷா சீண்டினார். “அவர் (ராகுல் காந்தி) மஹூதாவுக்கு வரப் போவதில்லை. அவருக்கு முடிவுகள் தெரியும், எனவே அவர் குஜராத்தில் தனது முகத்தை காட்டவில்லை, ”என்று அமித் ஷா கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil