Advertisment

ரூ22 ஆயிரம் கோடி கடன் மோசடி… கப்பல் கட்டும் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு

ஏபிஜி ஷிப்யார்டின் 22 ஆயிரம் கோடி கடன் மோசடி, சிபிஐ விசாரிக்கும் மிகப்பெரிய கடன் மோசடி வழக்குகளில் ஒன்றாகும்.

author-image
WebDesk
Feb 13, 2022 08:43 IST
CBI

சிபிஐ அலுவலகம்

குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் ரூ.22,842 கோடி கடன் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இது ஏஜென்சி விசாரிக்கும் மிகப்பெரிய கடன் மோசடி வழக்குகளில் ஒன்றாகும்.

Advertisment

ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் (ABGSL)நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரிஷி கமலேஷ் அகர்வால், அப்போதைய நிர்வாக இயக்குனர் சந்தானம் முத்தசாமி, இயக்குனர்கள் அஷ்வினி குமார், சுஷில் குமார் அகர்வால் மற்றும் ரவி விமல் நெவெட்டியா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மற்றொரு நிறுவனமான ஏபிஜி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மீது குற்றவியல் சதி, ஏமாற்றுதல், கிரிமினல் நம்பிக்கை மீறல் மற்றும் உத்தியோகபூர்வ பதவியை துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏபிஜி ஷிப்யார்ட் சிங்கப்பூரில் உள்ள துணை நிறுவனங்கள் மூலமாக 2012 - 2017 வரையிலான காலத்தில் கடன் நிதியை வேறு வழிகளில் கைமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜூலை 2016 இல் கடன் NPA என அறிவிக்கப்பட்டது. நிறுவனம் ஏற்கனவே தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT)வழக்குகளை எதிர்கொள்கிறது.

கடன் வழங்கியவர்களில் ஒன்றான எஸ்பிஐ வங்கி 2019இல் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த சிபிஐ, சூரத், பருச், மும்பை மற்றும் புனே என குற்றம் சாட்டப்பட்டவர்களின் 13 இடங்களில் சோதனை நடத்தியது.

சிபிஐ அறிக்கையின்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா,ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஓவர்சீஸ் கிளை என மொத்தம் 28 வங்கிகளின் கூட்டமைப்பை குற்றச்சாட்டப்பட்டவர் ஏமாற்றியுள்ளார். இந்த 28 வங்கி கூட்டமைப்பும் ஐசிஐசிஐ வங்கியால் வழிநடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிஜிஎஸ்எல் கடந்த 16 ஆண்டுகளில் ஏற்றுமதி சந்தைக்காக 46 உட்பட 165 கப்பல்களை உருவாக்கியுள்ளது. இதில் நியூஸ்பிரிண்ட் கேரியர்கள், சுய-டிஸ்சார்ஜிங் மற்றும் லோடிங் மொத்த சிமெண்ட் கேரியர்கள், மிதக்கும் கிரேன்கள், இன்டர்செப்டர் படகுகள், டைனமிக் பொசிஷனிங் டைவிங் சப்போர்ட் கப்பல்கள், புஷர் டக்குகள் மற்றும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கான புளொட்டிலா போன்ற சிறப்புக் கப்பல்கள் அடங்கும்.

வழக்குப்பதிவின் படி, ஏப்ரல் 2012 முதல் ஜூலை 2017 வரையிலான காலக்கட்டத்தில் எர்ன்ஸ்ட் அண்ட் யங் எல்.எல்.பி., குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒன்றிணைந்து நிதியைத் திருப்பி அனுப்புதல், தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் கிரிமினல் நம்பிக்கை மீறல் மற்றும் வங்கி நிதியுதவி அளித்த காரணம் அல்லாமல் பிற நோக்கங்களுக்காக நிதியை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

வங்கி புத்தகம் மற்றும் லெட்ஜர்கள் அடிப்படையில் பார்த்தால் ஏபிஜி எஸ்எல் நிறுவனம் மூலம் ஏபிஜி எனர்ஜிக்கு ரூ15 கோடி மற்றும் ரூ16 கோடி முறையே மாற்றப்பட்டுள்ளது. அதே நாட்களில், ABG இன்டர்நேஷனலிடமிருந்து தங்குமிட வைப்புத் தொகையைத் திரும்பப்பெறும் வகையில், 31 கோடி ரூபாய் நிதியாக பெறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வங்கி புத்தகத்தை மதிப்பாய்வு செய்ததில், ரூ300 கோடி மற்றும் ரூ95 கோடி பணம் வட்ட பரிவர்த்தனையின் மூலம் ஏப்ரல் 2014 முதல் தொடர்புடைய நிறுவன கூட்டாளிகளுக்கு அனுப்பபட்டதாகவும், பின்னர் அதே தேதியில் ABG இன்டர்நேஷனலிலிருந்து வரவாகவும் பெறப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment