Advertisment

‘நமாஸ் மட்டும் வன்முறையைத் தூண்டவில்லை’ - குஜராத் பல்கலை. துணைவேந்தர் நீர்ஜா குப்தா

குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் நீர்ஜா குப்தா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், சனிக்கிழமை இரவு நடந்த வன்முறைக்கான ஒரே தூண்டுதலாக நமாஸ் தொழுகை இருந்திருக்க முடியாது என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
Gujarat University VC Neerja Gupta

குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் நீர்ஜா குப்தா (Express photo by Nirmal Harindran)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குஜராத் பல்கலைக் கழகத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள், மாநிலத்தில் உள்ள சைவ சமூகத்தின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு உணவுப் பழக்கம் மற்றும் நடத்தை பற்றி வழிகாட்டுதல் மற்றும் கலாச்சார ரீதியாக உணர வேண்டும் என்று துணைவேந்தர் டாக்டர் நீர்ஜா குப்தா கூறியுள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘Namaz not the only trigger for violence; foreign students need to be sensitised’: Gujarat University V-C Neerja Gupta

குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து ரிது ஷர்மாவுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், தற்போதைய துணைவேந்தர் பதவியில் பொறுப்பேற்பதற்கு முன்பு, 16 ஆண்டுகள் வெளிநாட்டு படிப்பு திட்டத்தின் (எஸ்.ஏ.பி) ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய நீர்ஜா குப்தா, சனிக்கிழமை இரவு நடந்த வன்முறைக்கு நமாஸ் தொழுமை மட்டும் ஒரே தூண்டுதலாக இருந்திருக்க முடியாது என்று கூறினார். நீர்ஜா குப்தா கூறியதி தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே:

குஜராத் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை இரவு வன்முறையைத் தூண்டியது எது?

ஒரு குறிப்பிட்ட நிகழ்வு (நமாஸ் தொழுகை) இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு தூண்டுதலாக இருக்க முடியாது.

அப்படியானால் இந்த மோதலுக்கு என்ன வழிவகுத்திருக்கக் கூடும்?

இது ஒரு மத நடைமுறை பற்றிய கேள்வி அல்ல... இது ஒரு கலாச்சார நடைமுறையாக இருக்கலாம். கலாசார ஒருங்கிணைப்பின் அடிப்படையில் வெளிநாட்டு மாணவர்கள் சிறந்த முறையில் வழிகாட்டப்பட்டிருக்க வேண்டும்.

“உதாரணமாக (வெளிநாட்டு மாணவர்கள்) அசைவ உணவுகளை சாப்பிடுவார்கள். ஆனால், குஜராத் முதன்மையாக சைவ உணவு சாப்பிடும் சமூகம். எஞ்சியவற்றைக் கொட்டுவது ஒரு பிரச்சினையாக மாறும். எஞ்சியுள்ள பொருட்களை திறந்த வெளியில் கொட்டினால், தெரு நாய்கள் அச்சுறுத்தும் அபாயம் உள்ளது. பொது இடம் அனைவருக்கும் பகிரப்படுகிறது. இவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் என்பதால், விரைவில் கவனிக்கின்றனர். அதனால்தான் நான் சொன்னேன், இது ஒரு சம்பவத்தைப் பற்றி மட்டும் சொல்ல முடியாது. யாரோ ஒருவர் தொழுகை நடத்துவதைப் பார்த்து நாம் அவ்வளவு அறிவற்றவரக்ள் அல்லது சகிப்புத்தன்மையற்றவர்கள் அல்ல. நாம் அவர்களுக்கு (வெளிநாட்டு மாணவர்களுக்கு) சிறந்த வழிகளில் வழிகாட்ட வேண்டும். மேலும், உள்ளூர் சமூகம், பழக்கவழக்கங்கள் மற்றும் பரவலான உணர்வுகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்… அதனால் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

உங்கள் கருத்துப்படி, வன்முறைக்கு வேறு என்ன தூண்டுதல்களாக இருக்க முடியும்?

மற்றொரு விஷயம், அவர்களுக்கு ஒரு உரையாடல் தேவை என்று நான் உணர்கிறேன். எந்தவொரு சமூகத்திலும் வன்முறை ஒரு பெரிய பிரச்சனையைத் தூண்டும். அவர்களும் கேட்டு உணர வேண்டும். அவர்கள் நமது தூதர்கள் என்பதால் நமக்கும் இது ஒரு வாய்ப்பு. அவர்கள் நமது கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துச் செல்கிறார்கள்.

குஜராத் மிகவும் பாதுகாப்பான சமூகம். 2005 முதல் 2021 வரை கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக இந்த (எஸ்.ஏ.பி) துறையை நான் கையாண்டிருக்கிறேன். அதனால், அவர்கள் நம்முடைய இசை, உணவு மற்றும் நம்முடைய உடைகளை விரும்புவதை நான் பார்த்திருக்கிறேன். உள்ளூர் சமூகம் அந்த நம்பிக்கையை வளர்க்கிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு நீங்கள் வெளிநாட்டு மாணவர்களுடன் தொடர்பு கொண்டீர்களா?

இந்த அதிர்ச்சியை நிவர்த்தி செய்வது எப்போதும் நம்முடிஅய முன்னுரிமை. ஆலோசகர்கள் மற்றும் உளவியலாளர்கள் உள்ளனர். நேற்று முதல் வெளிநாட்டு மாணவர்களை மூன்று முறை சந்தித்துள்ளேன். நேற்று இரவு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுடன் இருந்தேன். அவர்கள் போதுமான முதிர்ச்சியடைந்தவர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. அதனால், அவர்களும் சில விஷயங்களை மெதுவாகப் புரிந்துகொள்கிறார்கள். எதிர்ப்பு எவ்வாறு எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நாம் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். நாம் சொல்வது போல் - இந்தியாவில், குஜராத்தில் ஒரு தாக்குதல் நடந்தது; அவர்களுக்கும் இது ஒரு முழு நாட்டைப் பற்றியது. எனவே, அவர்கள் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் எந்த மரபை விட்டுச் செல்ல வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இந்த உரையாடலை நானே எடுக்க முடிவு செய்தேன். கடந்த காலங்களில் நாங்கள் தீர்த்து வைத்த பல முரண்பாடுகளை நான் கையாண்டுள்ளேன்.

வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உள்ளூர் மாணவர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பிரதிநிதித்துவங்கள் எழுத்து வடிவில் சமர்ப்பிக்கப்பட்டதா?

எழுத்துப்பூர்வ பிரதிநிதித்துவம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. அல்லது உயர் அதிகாரிகளுக்கு இதுபோன்ற பிரதிநிதித்துவங்கள் எதுவும் தெரியாது. சில வாய்மொழி புகார்கள் மற்றும் அதுவும் கீழ் மட்டத்தில் இருக்கலாம். இந்தக் குறைபாடுகள் இப்போது தொடங்கியுள்ளது.

முன்பு புரையோடிப் போயிருந்த பிரச்னைகள், சனிக்கிழமை நடந்த சம்பவத்துக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்ததா?

ஆம், நாங்கள் விசாரிக்க முயற்சித்த போது மட்டுமே... இவை சில சிக்கல்கள் எங்களை காவலர் மாற்றத்திற்கு (செல்ல) வழிவகுத்தது. வெளிநாட்டில் படிக்கும் திட்டத்தின் முன்னாள் பொறுப்பாளர், அதிக வேலையில் இருந்ததையும் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். இப்போது, ​​அவர் அழுத்தத்தை எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. ஒவ்வொரு ஊழியர்களும் எங்களுக்கு விலைமதிப்பற்றவர்கள், அதே நேரத்தில், நிர்வாகம் மிகவும் முக்கியமானது.

வெளிநாட்டு மாணவர்களின் ஒரு பொதுவான கவலை என்னவென்றால், அவர்கள் தங்கள் பிரச்னைகளை பேசவோ அல்லது தீர்க்கவோ யாரையும் பார்க்கவில்லை.

இது தீவிரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருபதாண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு மாணவருடன் (வெளிநாட்டு மாணவர்) தொடங்கினோம். நாங்கள் 400 மாணவர்களை எட்டியுள்ளோம். மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க பல நோக்குநிலை நடைமுறைகள் எங்களுக்கு உதவியது. எங்காவது நாங்கள் அந்த நடைமுறைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

நாம் எந்த வகையான கலாச்சார உணர்வைக் குறிப்பிடுகிறோம், அதற்கான நடவடிக்கைகள் என்ன?

முன்னதாக, உள்ளூர் கலாச்சாரம் குறித்து செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை அடங்கிய கையேட்டை மாணவர்களுக்கு வழங்கினோம். தவிர, எதிர்பார்ப்புகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையே எப்போதும் இடைவெளி இருக்கும். பல எதிர்பார்ப்புகளுடன் அவர்கள் இங்கு வரலாம். ஆனால், அவர்கள் வேறு சூழலைக் காணலாம். சூழ்நிலை வித்தியாசமாக இருக்கும் வேறொரு நகரத்தில் அவர்கள் தங்கள் மற்ற சகாக்களுடன் தொடர்பில் இருக்கலாம். ஆனால், இப்போது நடைமுறையோ கையேடுகளோ இல்லை என்பதை தாமதமாகவே அறிந்து கொண்டேன். அது நிறுத்தப்பட்டு விட்டது.

வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் உள்ளூர் மாணவர்களிடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வேறு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா?

முதல் 10 நாட்களுக்கு (உள்ளூர்) மொழியில் நோக்குநிலை அமர்வுகள் இருந்தன. வெளிநாட்டு மாணவர்களுக்கு உள்ளூர் மக்களுடன் தொடர்புகொள்வதற்காக அல்லது அடையாளங்கள் பற்றிய தகவல்களுக்காக சிறிய குஜராத்தி கையேடு வழங்கப்பட்டது. நாங்கள் தொடர்புகள், மற்றும் உரையாடல்கள், சமூகக் கூட்டங்கள் மற்றும் பல்வேறு நாடுகளுக்கான சிறப்பு நாட்களைக் கொண்டாடினோம். ஹோலி அல்லது தீபாவளி போன்ற உள்ளூர் கலாச்சார விழாக்கள் பற்றியும் அவர்களுக்கு கூறப்பட்டது.

இயக்குநர்கள், முதல்வர்கள் மற்றும் துறைத் தலைவர்களுடன் அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர்களிடம் கூறவும் நாங்கள் பழக்கினோம். இதுவும் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டேன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment