காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்: தொடரும் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூவின் சிங்போரா பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அதிகாலை மோதல் வெடித்தது. 3 முதல் 4 பயங்கரவாதிகள் கொண்ட குழு பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூவின் சிங்போரா பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அதிகாலை மோதல் வெடித்தது. 3 முதல் 4 பயங்கரவாதிகள் கொண்ட குழு பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gunfight erupts in Jammu and Kashmir

பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்: தொடரும் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூவின் சிங்போரா பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அதிகாலை மோதல் வெடித்தது. முதற்கட்ட தகவல்களின்படி, 3 முதல் 4 பயங்கரவாதிகள் கொண்ட குழு பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, அச்சுறுத்தலைத் தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisment

உள்ளூர் காவல்துறையினரால் வழங்கப்பட்ட "துல்லியமான தகவல்" அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. பயங்கரவாதிகள், சமீபத்தில் அதே பகுதியில் நடந்த மோதலில் தப்பிச்சென்ற அதே குழுவை சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. பயங்கரவாதிகளுடன் உயர் எச்சரிக்கை நடவடிக்கையில் படைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், துப்பாக்கிச் சண்டை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் உடனடியாக உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Gunfight erupts in Jammu and Kashmir’s Kishtwar as security forces corner terrorists

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் உள்ள நாதிர் கிராமத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு தனித்தனி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 3 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகளின் கூட்டுக் குழுவின் இன்றைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisment
Advertisements

இம்மாத தொடக்கத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த 2 முக்கிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில், ஜெய்ஷ்-இ-முகமது தொடர்புடைய 3 பேர் உட்பட 6 பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் (CRPF) படையினரால் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை ஷோபியனின் கெல்லர் பகுதியிலும், வியாழக்கிழமை புல்வாமாவின் டிராலின் நாடார் பகுதியிலும் என்கவுண்டர்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்.22 அன்று 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து தெற்கு காஷ்மீரின் சில பகுதிகளில் பாதுகாப்பு முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான பரந்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சொத்துக்களை இடிக்கவும் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

Jammu And Kashmir

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: