6 மாதங்களுக்கு முன், 13 வயது சிறுமி குர்கானில் உயர் வகுப்புகாரர்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் வீட்டிற்கு, வீட்டு வேலை செய்ய செல்கிறார். 3 பேர் வசிக்கும் அந்த குடும்பத்தில் அவர் முதலில் "மகள் போல்" நடத்தப்படுகிறார். ஆனால் நாளடைவில் அது மிகவும் கொடுமைகரமாக மாறியது.
பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், "அவர்கள் முதலில் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். 55 வயதுடைய வீட்டு உரிமையாளப் பெண் என்னை அவர் அருகில் அமர வைத்து டி.வி பார்ப்பார்கள். உணவை ஆர்டர் செய்து எனக்கு கொடுப்பார்கள். ஆனால் ஒரு மாதம் கழித்து, விஷயங்கள் மாறத் தொடங்கின" என்றார்.
“ஒரு நாள், அவர்கள் (அந்தப் பெண்ணும் அவளுடைய இரண்டு மகன்களும்) என்னை அடிக்க ஆரம்பித்தார்கள்… 5 மாதங்களாக என்னை அடித்தார்கள். அன்ஹோனே சப் காந்தி ஹர்கட் கி மேரே சாத் (எல்லா கெட்ட விஷயங்களையும் அவர்கள் செய்தார்கள்). எது கையில் கிடைக்கிறதோ அதை வைத்து எல்லாம் என்னை அடித்தார்கள் - குச்சி, சுத்தியல் என எது கிடைத்தாலும் அதை வைத்து அடித்து துன்புறுத்தினார்கள். மேலும் அவர்கள் என்னை கத்தியால் கூட வெட்டினார்கள்…” என்று சிறுமி கூறினார்.
சில வாரங்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணின் 30 வயது இருக்க கூடிய இரண்டு மகன்களும், சிறுமியை தவறாக நடத்தியும் பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கிய போது இந்த விஷயங்கள் கோரமான திருப்பத்தை எடுத்தன. சிறுமி கூறுகையில், ஒரு நாள் அந்த பெண் என் ஆடையைக் கழற்றினாள். அப்போது அவர் மகன்கள் என்னை வீடியோ எடுத்தனர். இது நவம்பர் மாதம் நடந்தது. 2 மகன்களும் என்னை தொட்டனர், நான் அவர்களைத் தடுக்க முயன்றபோது, அவர்கள் என்னை அடித்தனர். ஒருமுறை அந்த பெண் சுத்தியலை எடுத்து என்னை கீழே (பிறப்புறுப்பில்) அடித்தாள். அப்போது அந்த பெண்ணின் கையை நான் கடித்தேன். இதையடுத்து அவர் என்னை ஒரு நாற்காலியில் கட்டி என் வாயில் டேப் ஒட்டினார் என்று சிறுமி கூறினார்.
'வீட்டு உரிமையாளப் பெண் வீட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டார்'
வீட்டு உரிமையாளப் பெண் எப்போதும் வீட்டிலேயே இருப்பதாக சிறுமி கூறினார். "அவர் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல மாட்டார். எப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பார். நான் வீட்டில் செல்லும் எல்லா இடங்களிலும் கேமரா வைத்தனர்.
எனக்கு யாரிடமும் கேட்க வழி இல்லை. வீட்டு மாடிக்கு செல்லும் வழியில் கிரில் கேட் வைத்து அதை பூட்டி வைத்தனர். மேலும் டெலிவரி ஆட்கள் வீட்டிற்கு வந்தாலும் அவள் எப்போதும் அங்கேயே இருந்ததால் யாரிடமும் என்னால் சொல்ல முடியவில்லை. மேலும், அவள் வீட்டுக்கு கதவை பாஸ்வேர்ட் வைத்து பூட்டினாள். யாரும் வெளியே செல்லவோ அல்லது எளிதாக உள்ளே வரவோ முடியாது," என்று சிறுமி கூறினார். மேலும் தனக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டதாகவும் அந்த சிறுமி கூறினார்.
“எனக்கு நீளமாக முடி இருந்தது, ஆனால் அவர்கள் அதை வெட்டி விட்டனர். காயத்தால் ரத்தம் சொட்டினாலும் அவர்கள் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். ஒருமுறை அவர்கள் என்னை துஷ்பிரயோகம் செய்து, எல்லோர் முன்னிலையிலும் என்னை ஆட வைப்பார்கள் என்று மிரட்டினார்கள்.
சிறுமியின் முகத்தில் தழும்புகள், கழுத்தில் கத்தி காயம் மற்றும் கையில் தீ காயங்கள் இருந்தன. " அந்த வீட்டு உரிமையாளப் பெண் தூங்கச் செல்லும்போது, நான் தப்பிக்க முயற்சிக்காதபடி அவள் என்னைக் கட்டிவிடுவாள்" என்று சிறுமி கூறினார்.
அவர்கள் வீட்டில் ஒரு நாய் இருந்தது, மேலும் அந்த பெண் அதை கடிக்க தூண்டுவார் என்று அவர் கூறினார்.
"எனக்கு என் அத்தையின் போன் நம்பர் தெரியும், ஆனால் நான் யாரையும் அழைக்க முடியாது. என்னை என் அப்பா பார்க்க வரும் போது அவர்கள் அவரை மிரட்டினர் என்று சிறுமி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
‘என் மகளுக்கு என்ன நடக்கிறது என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை’
என்னால் போதுமான அளவு சம்பாதிக்க முடியவில்லை. என் மனைவியின் வருமானமும் எங்கள் 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்று தோட்டக்காரரான சிறுமியின் தந்தை கூறினார்.
“முதல் இரண்டு மாதங்கள், என் மகளிடம் இருந்து சம்பளம் வந்தது. பிறகு, அது நின்றுவிட்டது. நான் அவளைப் பார்க்க சில முறை அங்கு சென்றேன், ஆனால் அந்த பெண் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை மற்றும் என்னை மிரட்டினார். எனது மனைவி தனது முன்னாள் முதலாளியிடம் உதவிக்காகச் சென்றபோது, என் மகள் இப்படி இருகிறார் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை,” என்றார்.
டெல்லி செக்டர் 57-ல் அந்த வீடு உள்ளது. 4-வது மாடியில் வசிக்கும் அந்த பெண் வீட்டில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளப் பெண்ணுக்குச் சொந்தமான அடித்தளத்திலும் கேமராக்கள் இருந்தன. அவை 15 நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்டன என்று பக்கத்து வீட்டுக்காரர் கூறினார். பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில், அந்த வீட்டு உரிமையாளர் பெண் அங்கு வசிக்கும் எல்லோரிடமும் சண்டை போடுவார். அராஜகம் செய்வார். ஆனால் அவள் வீட்டில் ஒரு மைனர் பெண் வேலைக்கு அமர்த்தியது யாருக்கும் தெரியாது. நான் அந்த சிறுமியை ஒரு முறை மட்டுமே பார்த்துள்ளேன். ஒரு முறை சண்டை வந்தபோது அந்த பெண்ணுடன் சிறுமி வந்தார். நான் அந்த சிறுமியை அவனுடைய உறவினர் என்று நினைத்தேன், ” என்று கூறினார். மேலும் அந்த பெண்ணின் பெயர் சஷி என்றும் அவளுடைய 2 மகன்களும் சாலை திட்டங்களில் ஒப்பந்ததாரரிடம் வேலை செய்வதாக கூறினார்.
மேலும் அந்தப் பெண் ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு தான் அந்த பிளாட்டை வாங்கி குடி வந்தார்கள் என அந்த பிளாட்டை விற்ற நபர் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/delhi/how-job-help-family-poverty-nightmare-gurgaon-teenager-9062505/
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.