Advertisment

ஹரியானாவில் வகுப்புவாத பதற்றம்; குர்கான் மசூதி தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; நுஹ் நகரில் ஊரடங்கு உத்தரவு

ஹரியானா மாநிலம், குர்கானில் உள்ள ஒரு மசூதிக்கு தீ வைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 70-80 பேர் கொண்ட கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அதில் நைப் இமாம் என்பவர் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
gurgaon mosque attacked, gurgaon police, gurgaon mosque attack deaths, ஹரியானாவில் வகுப்புவாத பதற்றம், குர்கான் மசூதி தாக்குதலில் ஒருவர் பலி, நுஹ் நகரில் ஊரடங்கு உத்தரவு, mosque attack killed, Tamil indian express

ஹரியானாவில் வகுப்புவாத பதற்றம்; குர்கான் மசூதி தாக்குதலில் ஒருவர் பலி; நுஹ் நகரில் ஊரடங்கு உத்தரவு

ஹரியானா மாநிலம், குர்கானில் உள்ள ஒரு மசூதிக்கு தீ வைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 70-80 பேர் கொண்ட கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அதில் நைப் இமாம் என்பவர் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisment

குருகிராம் கிழக்கு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.சி.பி) நிதிஷ் அகர்வால், 57வது செக்டார் அஞ்சுமன் ஜமா மசூதி திங்கள் கிழமை இரவு எரிக்கப்பட்டது. “நாங்கள் சில குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்திருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்த சம்பவத்தின்போது குற்றவாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் “நைப் இமாம் மற்றும் சில பேர் மிக மோசமாகக் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இமாமுக்கு கத்திக் குத்து காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது” என்று டி.சி.பி நிதிஷ் அகர்வால் கூறினர்.

குருகிராம் போலீஸ் கமிஷனர் கலா ராமச்சந்திரன் கூறியதாவது: “பி.எஸ் செக்டார் 56 ஜி.ஜி.எம் பகுதியில் உள்ள செக்டார் 57-ல் உள்ள அஞ்சுமன் மசூதியை இன்று அதிகாலை 12:10 மணியளவில் ஒரு கும்பல் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்தார். தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தன. தாக்குதல் நடத்தியவர்கள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டதோடு, இரவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்களில் பலர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். வழிபாட்டு தலங்களை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமைதியை உறுதிப்படுத்தும் வகையில் இரு சமூகத்தினரின் முக்கியஸ்தர்களுடன் காவல்துறையும் நிர்வாகமும் அமைதி கூட்டங்களை நடத்தி வருகின்றன.” என்று கூறினார்.

மேலும், சோஹ்னா / பட்டோடி / மனேசர் பகுதிகளில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று போலீஸ் கமிஷனர் கலா ராமச்சந்திரன் கூறினார்.

publive-image

குருகிராம் மாவட்டத்தில் உள்ள நுஹ் என்ற இடத்தில் திங்கட்கிழமை, ஜூலை 31, 2023, ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சோஹ்னாவில் வன்முறை வெடித்ததால், வாகனங்கள் மற்றும் கடைகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததால் புகை மூட்டம் ஏற்பட்டது. (PTI Photo)

வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தளம் நடத்திய ஊர்வலத்தின் போது நூஹ் நகரில் நடந்த மோதலுக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு வன்முறை ஏற்பட்டது. இதில் இரண்டு வீட்டுக் காவலர்கள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார். புதியதாக எந்த வன்முறையும் இல்லையென்றாலும் நுஹ்வில் நிலைமை தொடர்ந்து பதட்டமாகவே இருந்தது. நுஹ் மற்றும் பிற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Haryana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment