உலகிலேயே அதிக மாசடைந்த இடம் இது தான்... முதலிடம் பிடித்த இந்திய நகரம் எது தெரியுமா ?

முதல் 30 இடங்களில் 22 இந்திய நகரங்கள் இடம் பிடித்திருப்பது மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Gurgaon world’s most polluted city : உலகின் மிகவும் மாசடைந்த நகரங்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பத்தில் 7 இடங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன.  இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் அமைந்திருக்கும் கூர்கான் தான் உலகிலேயே அதிக அளவு மாசடைந்துள்ள நகரம் ஆகும்.

Gurgaon world’s most polluted city in 2018 – முதல் ஐந்து இடத்தைப் பிடித்த நகரங்கள்

IQAir AirVisual மற்றும் Greenpeace கணக்கெடுப்பின் படி வெளியாகியுள்ள இந்த பட்டியலில் பாகிஸ்தானின் ஃபைசிலாபாத் நகரையும் சேர்த்து முதல் ஐந்து இடங்களை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துள்ளது.

Gurgaon world's most polluted city

காற்றில் அதிகமாகி வரும் மாசுவின் காரணமாக மனிதர்களின் நுரையீரல் மற்றும் இரத்த நாளங்களில் இந்த தூசிகளும் அசுத்தங்களும் தங்கி பல்வேறு உடல் உபாதைகளை உருவாக்குகின்றன. இதனால் நம்முடைய சுகாதாரம் கெடுவதுடன் நமது பணமும் அதிக அளவு மருத்துவமனையில் விரையமாகும்.

முதல் 30 இடங்களில் 22 இந்திய நகரங்கள் இடம் பிடித்திருப்பது மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீதம் இருக்கும் எட்டு இடங்களில் 5 நகரங்கள் சீனாவிலும், இரண்டு நகரங்கள் பாகிஸ்தானிலும், ஒரு நகரம் வங்க தேசத்திலும் உள்ளன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close