/indian-express-tamil/media/media_files/Fz0u6Fo3EP43DWWbZLEY.jpg)
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ஞானேஷ் குமார் (வலது) மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர். (புகைப்படங்கள்: பாராளுமன்ற விவகார அமைச்சகம் மற்றும் X/@NHAI_Official)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு வியாழக்கிழமை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்தது.
ஆங்கிலத்தில் படிக்க: Gyanesh Kumar, Sukhbir Singh Sandhu picked as Election Commissioners by PM Modi-led panel
இருப்பினும், குழுவில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினரான காங்கிரஸ் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அதிகாரிகளின் தேர்வு பட்டியல் தனக்கு முன்கூட்டியே கிடைக்கப்பெறவில்லை என்று கூறி, செயல்முறை குறித்து கேள்வி எழுப்பி தனது மறுப்பை பதிவு செய்தார். பட்டியலில் உள்ள அனைத்து வேட்பாளர்களின் விவரங்களுடன் தனக்கு வழங்கக்கூடிய ஒரு தேர்வு பட்டியலை கூட்டத்திற்கு முன்பு வழங்கக் கேட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார். 212 அதிகாரிகளின் பெயர்களை அரசு புதன்கிழமை அனுப்பியதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
236 பெயர்களைக் கொண்ட ஐந்து பட்டியல்களை அரசாங்கம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அனுப்பியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய அரசாங்கத்தில் செயலாளராகவும் அதற்கு இணையான செயலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற 92 அதிகாரிகளின் பெயர்கள், இந்திய அரசாங்கத்தில் செயலாளராக அல்லது அதற்கு இணையாக பணியாற்றி வரும் 93 அதிகாரிகளின் பெயர்கள், கடந்த ஓராண்டில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற 15 அதிகாரிகளின் பெயர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளர்களாக பணியாற்றி வரும் 28 மற்றும் 8 அதிகாரிகளின் பெயர்கள் ஆகியவை முழுமையான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.