மே மாதம், வாரணாசி நீதிமன்றம், காசி விஸ்வநாதர் கோவில்-ஞானவாபி மசூதி வளாகத்தின் வீடியோகிராஃபி ஆய்வுக்கு உத்தரவிட்டபோது, எந்த வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்ற முயற்சி செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்தது.
திங்களன்று, ஞானவாபி வழக்கில் வாரணாசி மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு கட்சி அமைதியாக இருந்தது.
காங்கிரஸ் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில், அரசியல் ரீதியாக மௌனம் காக்க விரும்புகின்றன.
நீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்டதற்கு, “அவர்கள் எதுவும் செய்யவில்லை. விஷயம் நீதிபதி முன்னிலையில் உள்ளது. ஏதாவது வரும்போது எதிர்வினையாற்றுவோம். இன்று எதுவும் நடக்கவில்லை. இது நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கை குறித்த அறிவிப்பு மட்டுமே. சட்டப்பூர்வ செயல்முறை நடந்து கொண்டிருப்பதால் நாங்கள் எதிர் வினையாற்றவில்லை.
மே மாதத்தில், அப்போதைய பிவி நரசிம்ம ராவ் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991ஐ குறிப்பிட்ட காங்கிரஸ், மற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அவை இருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றது.
ஏற்கனவே நீதிமன்றத்தில் இருந்த ராம ஜென்மபூமி-பாபர் மசூதி சர்ச்சை வழக்கைத் தவிர, இச்சட்டம் 1947 இல் இருந்ததைப் போலவே வழிபாட்டுத் தலங்களின் "மதத் தன்மையை" பராமரிக்க முயல்கிறது.
கட்சியின் சிந்தன் அமர்வுக்கு மத்தியில், உதய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் நரசிம்மராவ் அரசில் ஆழ்ந்த பரிசீலனைக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.
அந்தச் சட்டத்தில் ராம ஜென்மபூமி மட்டும் விதிவிலக்கு. மற்ற எல்லா வழிபாட்டுத் தலங்களும் இருந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். எந்த ஒரு வழிபாட்டு தலத்தின் நிலையை மாற்றும் முயற்சியை நாம் செய்யக்கூடாது. அது மிகப்பெரிய மோதலுக்கு வழிவகுக்கும், இதுபோன்ற மோதலைத் தவிர்க்கவே நரசிம்மராவ் அரசு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை இயற்றியது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“