ஞானவாபி மசூதி; தொல்லியல் துறை ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
ஞானவாபி மசூதி ஆய்வு; விசாரணை நீதிமன்ற உத்தரவை ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை அமல்படுத்தக் கூடாது - தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு
ஞானவாபி மசூதியின் அறிவியல் ஆய்வை நிறுத்தி வைத்து, வழக்கின் மனுதாரர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதித்தது. தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், இந்திய தொல்லியல் துறை (ASI) ஞானவாபி மசூதி வளாகத்தை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.
Advertisment
குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு மசூதி வளாகத்தில் எந்த அகழ்வாராய்ச்சி பணியும் செய்யப்படாது என்று சொலிசிட்டர் ஜெனரல் உறுதி அளித்ததையும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
ஞானவாபி மசூதி வளாகத்தின் ASI ஆய்வு மீதான உச்ச நீதிமன்ற தடை உத்தரவுக்கு பதிலளித்த வாரணாசி மாவட்ட ஆட்சியர், “நீதிமன்ற உத்தரவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்று கூறினார்.
ASI குழு திங்கள்கிழமை காலை மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய வந்தது.
வெள்ளிக்கிழமை, வாரணாசி நீதிமன்றம் மசூதி வளாகத்தின் "அறிவியல் விசாரணை / ஆய்வு / அகழ்வாராய்ச்சிக்கு" ASI மூலம் உத்தரவுகளை வழங்கியது. மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி அஜய கிருஷ்ணா விஸ்வேஷா, "கேள்விக்குரிய கட்டிடத்தின் மூன்று குவிமாடங்களுக்கு கீழே தரையில் ஊடுருவக்கூடிய ரேடார் ஆய்வை நடத்தவும், தேவைப்பட்டால், அகழ்வாராய்ச்சி செய்யவும்" ASI க்கு உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil