கேரள பெண் ஹாதியா - ஷபீன் கான் திருமணம் செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஹதியா திருமணம் செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் அறிவிப்பதற்கு அதிகாரம் இல்லை

மதமாற்றம் திருமணம் செய்துக் கொண்ட கேரள பெண் ஹாதியா மற்றும் ஷபீன் ஜகான திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும், தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க ஹதியாவுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அகிலா என்ற பெண் தான் தற்போது, ஹாதியா என்று அழைக்கப்படுகிறார்.சேலத்தில் உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் படித்தபோது ஹாதியா இஸ்லாமிய மதத்திற்கு   மாறினார். அத்துடன், ஷபீன் ஜகான் என்ற இளைஞரையும் காத்கல் திருமணம் செய்துக் கொண்டார்.

இதனையடுத்து ஹாதியாவின் தந்தை தனது மகளை ஷபீன் ஜகான் கட்டாய மத மாற்றுத் திருமணம் செய்துக் கொண்டதாகவும், ஷபீன் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக தனது மகளை ஏமாற்றியுள்ளதாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹாதியாவை பெற்றோருடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டது.

கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஷபின் ஜகான், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஹதியா – ஷாகின் ஜெகான் திருமணம் செல்லும் என்றும், தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க ஹதியாவுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஹதியா திருமணத்திற்கு தடை விதித்த கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நீதிபதி தீபக் மிச்ரா இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளார். . ஹதியா திருமணம் செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் அறிவிப்பதற்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close