Advertisment

கேரளாவில் விவாதத்தை தூண்டிய மதமாற்றம்; விவாகரத்து பெற்று, மறுமணம் செய்து கொண்ட ஹாதியா

கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்ட மதமாற்ற வழக்கு; இஸ்லாம் மதத்திற்கு மாறி திருமணம் செய்துக் கொண்ட மருத்துவர் ஹாதியா; கணவரைப் பிரிந்து மறுமணம் செய்துக் கொண்டதாக வீடியோ வெளியீடு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hadiya

ஹோமியோபதி மருத்துவர் ஹாதியா

Shaju Philip

Advertisment

கடந்த 2017-ம் ஆண்டு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இஸ்லாம் மதத்துக்கு மாறி, மதம் மாறிய ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஹாதியா, ஷெஃபின் ஜஹானிடமிருந்து பிரிந்து மறுமணம் செய்து கொண்டார்.

ஆங்கிலத்தில் படிக்க: Hadiya, whose conversion was at centre of debate in Kerala, says she has divorced, remarried

ஹோமியோபதி மருத்துவரான ஹாதியா, தனது கணவரைப் பிரிந்து, தனக்கு விருப்பமான ஒருவரை மறுமணம் செய்து கொண்டதாக சனிக்கிழமை வீடியோவில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நபரும் திருமணம் செய்துகொள்வதற்கும் உறவிலிருந்து வெளியேறுவதற்கும் அரசியலமைப்பு உரிமை வழங்கியுள்ளது. இது சமூகத்தில் பொதுவான ஒன்று. என் விஷயத்தில் சமூகம் ஏன் எரிச்சலடைகிறது என்று எனக்குப் புரியவில்லை. நான் முடிவெடுக்கும் திறன் கொண்ட பெரியவள். என்னால் (ஜஹானுடன்) திருமணத்தைத் தொடர முடியாதபோது, ​​அதிலிருந்து வெளியேறினேன். இப்போது என் விருப்பப்படி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். நான் மகிழ்ச்சியாக முஸ்லிமாக வாழ்கிறேன். மறுமணம் பற்றி என் பெற்றோருக்கும் தெரியும்என்று ஹாதியா கூறினார்.

வைக்கம் பகுதியைச் சேர்ந்த ஹாதியாவின் தந்தை கே.எம். அசோகன், தனது மகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்த ஒரு நாளுக்குப் பிறகு அவர் வீடியோவை வெளியிட்டார். நாங்கள் ஹாதியாவுடன் தொலைபேசியில் பேசுவோம், ஆனால் அவர் தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்று அசோகன் கூறினார். இந்த மனுவை அடுத்த வாரம் உயர்நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.

சனிக்கிழமையன்று வீடியோவில், ஹாதியா தனது தந்தை ஏன் உயர்நீதிமன்றத்தை நாடினார் என்று தெரியவில்லை என்று கூறினார். தனது புதிய வாழ்க்கைத் துணையைப் பற்றிய விவரங்களை வெளியிட மறுத்த ஹாதியா, இதுபோன்ற விஷயங்களைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை என்று கூறினார்.

மலப்புரம் மாவட்டத்தில் ஹாதியா கிளினிக் நடத்தி வந்தார். விவாகரத்து பெற்ற பிறகு, அவர் திருவனந்தபுரம் சென்றார். அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டபோது, ​​இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

கோட்டயத்தில் இந்துக் குடும்பத்தில் கே.எம்.அகிலாவாகப் பிறந்து வளர்ந்த ஹாதியா, தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் போதே முதன்முதலில் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டார். பின்னர், அவர் இஸ்லாம் நம்பிக்கையைத் தழுவி, பின்னர் மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிந்த ஜஹானை மணந்தார்.

அவர்களது திருமணத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அவரது தந்தை ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனு தாக்கல் செய்ததால் பிரச்சனை தொடங்கியது. அந்தத் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம், ஹாதியா தனது பெற்றோர் பாதுகாப்பில் இருக்க உத்தரவிட்டது, இது மாநிலத்தில் பரபரப்பான விவாதத்தைத் தூண்டியது. ஹாதியா பல மாதங்களாக, போலீஸ் பாதுகாப்பில் வாழ்ந்தார்.

மார்ச், 2018 இல், உச்ச நீதிமன்றம் அவரது கணவர் ஜஹானுடன் வாழ அனுமதித்தது, மேலும், அவர்களின் திருமணத்தை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. ஜஹானின் மனு மீது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. அசோகன் இந்த வழக்கில் தனது மகள் "பயங்கரவாதி" உடன் செல்ல அனுமதிக்க முடியாது என்று குற்றம் சாட்டினார்.

இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பும் விசாரணை நடத்தி, ஹாதியா கட்டாயப்படுத்தப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா என்பது குறித்து விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கின் விசாரணையைத் தொடர என்.ஐ.ஏ.க்கு அனுமதி அளித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kerala Thiruvananthapuram Hadiya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment