/tamil-ie/media/media_files/uploads/2019/08/APSRTC-ticket.jpg)
Hajj, Jerusalem pilgrimage advertisement, Tirupati Bus Tickets, திருப்பதி பேருந்து பயணச்சீட்டில் விளம்பரம், ஹஜ், ஜெருசலம் புனித பயண விளம்பரம் சர்ச்சை, Andhra Pradesh Road Transport Corporation, APSTRC bus tickets,Andhra Pradesh Government inquiry
Hajj, Jerusalem pilgrimage ads on Tirupati Bus Tickets: திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் ஆந்திரப் பிரதேச அரசுப் பேருந்து பயணச்சீட்டில் ஹஜ், ஜெருசலம் புனிதப் பயணம் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆந்திரப் பிரதேச அரசு சம்பந்தப்பட்ட அதிகாரியை பணி நீக்கம் செய்துள்ளது.
திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் ஆந்திரப் பிரதேச சாலைப் போக்குவரத்து கார்ப்பரேஷன் (ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி) பேருந்து பயணச்சீட்டின் பின்புறம் ஹஜ் ஜெருசலம் புனிதப் பயணம் செய்வதற்கான விளம்பரம் அச்சிடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பயணிகள் சிலர் அந்தப் பகுதியின் போக்குவரத்து மேலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த விவகாரத்தில் (ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி) தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்களிடம் உள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், தெரிவித்துள்ளது. மேலும், இதில், நெல்லூரில் உள்ள ஸ்டோர் கட்டுப்பாட்டாளர் எம்.ஜெகதீஷ் பாபு, பணியில் அலட்சியமாக இருந்ததாகவும் கடமையை செய்யத் தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மேலும், இந்த விளம்பரங்களை சிறுபான்மையினர் துறை அளித்ததும் தெரியவந்துள்ளது. இருப்பினும், சிறுபான்மையினர் துறை வெளியிட்ட விளம்பரத்தின் உள்ளடக்க விஷயத்தை ஸ்டோர் கட்டுப்பாட்டாளர் கவனிக்கத் தவறியதோடு அதை திருப்பதி பனிமனைக்கு அனுப்பியுள்ளார் என்று ஸ்டோர் கட்டுப்பாட்டாளர் என்று கூறுகின்றனர். இது தொடர்பாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஆந்திரப் பிரதேச அரசு நடத்திய விசாரணையில், இந்த பயணச்சீட்டுகள் முந்தைய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் அச்சிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அம்மாநில அறநிலையத்துறை அமைச்சர் வெள்ளம்பள்ளி ஸ்ரீனிவாஸ் தெரிவிதுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.