Advertisment

ஹமாஸ் பற்றி X பதிவு; மும்பை பள்ளி முதல்வர் அதிரடி பணி நீக்கம்: நடந்தது என்ன?

ஏப்ரல் 24 அன்று பதிவு வெளியான பிறகு, நிர்வாகம் ஏப்ரல் 26 அன்று அவருடன் ஒரு கூட்டம் நடத்தி ராஜினாமா செய்ய வலியுறுத்தியது.

author-image
WebDesk
New Update
 Mum scho.jpg

பள்ளி முதல்வர் பர்வீன் ஷேக்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மும்பையில் உள்ள சோமையா பள்ளியின் முதல்வர் பர்வீன் ஷேக்கை அதன் நிர்வாகம் செவ்வாய்கிழமை பணிநீக்கம் செய்தது. சமூக ஊடக தளமான X  தளத்தில் அவர் ஹமாஸ்- இஸ்ரேல் பற்றி பதிவிட்டிருந்ததற்கு விமர்சனங்கள் எழுந்த  நிலையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது அரசியல் காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளது என பர்வீன் ஷேக் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Advertisment

பள்ளியை நடத்தும் சோமையா வித்யாவிஹார் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில்,  “சமீபத்தில், சோமையா பள்ளியில் தலைமைப் பதவி வகிக்கும் திருமதி பர்வீன் ஷேக்கின் தனிப்பட்ட சமூக ஊடக நடவடிக்கைகள் பற்றி எங்கள் கவனத்திற்கு வந்தது. இது நாங்கள் போற்றும் மதிப்புகளுக்கு தவறாக உள்ளது.

கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நாங்கள் வலுவாக ஆதரிக்கிறோம், இருப்பினும் அது முழுமையானது அல்ல என்பதையும், மற்றவர்களுக்குப் பொறுப்புடனும் மரியாதையுடனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நமது ஒற்றுமை மற்றும் உள்ளடக்கிய நெறிமுறைகள் சமரசம் செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, இந்த பிரச்சனையின்  தீவிரத்தை கருத்தில் கொண்டு, கவனமாக பரிசீலித்த பிறகு, நிர்வாகம் திருமதி. பர்வீன் ஷேக்கை பணிநீக்கம் செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மற்றும் ஹமாஸுக்கு அனுதாபம் கொள்ளும் வகையிலான பதிவுகளை அவர் X தளத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இதுகுறித்து OpIndia என்ற இணையதளம் செய்தி வெளியிட்ட நிலையில் ஷேக்கை ராஜினாமா செய்யும்படி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. 

ஏப்ரல் 24 அன்று கட்டுரை வெளியான பிறகு, நிர்வாகம் ஏப்ரல் 26 அன்று அவருடன் ஒரு கூட்டம் நடத்தி ராஜினாமா செய்யச் சொன்னது. இருப்பினும், ஜனநாயகத்தில் தனது பேச்சு சுதந்திரத்தை வலியுறுத்தி, ஷேக் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். மேலும் தான் இந்த பள்ளிக்கு 100% உழைப்பை  வழங்கியதாகக் கூறினார். பின்னர் மே 4 அன்று ஷேக்கிடம் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டது.

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/mumbai/mumbai-school-sacks-principal-over-hamas-posts-she-calls-action-politically-motivated-9314471/

சோமையா பள்ளியுடன் 12 வருட தொடர்பைக் கொண்டிருந்த ஷேக், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் முதல்வராக இருந்து வந்தார்.  பணி நீக்கம் குறித்து ஷேக் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார், அவர் கூறுகையில், “நிர்வாகத்திடம் இருந்து கடிதம் பெறுவதற்கு முன்பே சமூக ஊடகங்களில் இருந்து எனது பணிநீக்கம் பற்றிய செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பணிநீக்கம் அறிவிப்பு முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் எனக்கு எதிராக பரப்பப்பட்ட அவதூறான பொய்களை அடிப்படையாகக் கொண்டது. பள்ளி அதிபராக எனது பணி விதிவிலக்கானது மற்றும் அத்தகைய காரணத்திற்காக எனது பணிநீக்கம் தவறானது மற்றும் நியாயமற்றது என்று கூறினார்.  

அவர் தொடர்ந்தார், “எனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் 12 ஆண்டுகளில் பள்ளியின் வளர்ச்சிக்கு நேர்மையான பங்களிப்பு இருந்தபோதிலும், நிர்வாகம் எனக்கு எதிரான இந்த கொடூரமான பொது அவதூறு பிரச்சாரத்தை எதிர்கொண்டு எனக்கு ஆதரவாக நிற்கவில்லை. அதற்கு பதிலளிக்காமல் நான் இரையாகிவிட்டதால் நான் ஏமாற்றமடைந்தேன். இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது, தற்போது நான் சட்ட ரீதியிலான ஆப்ஷன்களை பரிசீலித்து வருகிறேன்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment