Advertisment

காங்கிரஸில் இணையும் பா.ஜ.க முன்னாள் நிர்வாகி: தேர்தலில் போட்டியிட அனுமதி மறுப்பு

ஹரக் சிங் ராவத் காங்கிரஸில் இணைக்கப்பட்டாலும், அவர் தேர்தலில் களமிறங்க வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக அவரது மருமகள் லான்ஸ்டவுன் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கலாம் என கூறப்படுகிறது

author-image
WebDesk
New Update
காங்கிரஸில் இணையும் பா.ஜ.க முன்னாள் நிர்வாகி: தேர்தலில் போட்டியிட அனுமதி மறுப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஏஐசிசி பொறுப்பாளர் தேவேந்திர யாதவ், அம்மாநில கட்சி தலைவர் கணேஷ் கோடியல், சிஎல்பி தலைவர் பிரீதம் சிங் உள்ளிட்டோர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட ஹரக் சிங் ராவத்தை மீண்டும் காங்கிரசில் சேர்க்க வலியுறுத்தி வரும் நிலையில், ஹரிஷ் ராவத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக அவரது வருகை தாமதமானது. தற்போது, அந்த ஃபார்முலா மீண்டும் செயல்படுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Advertisment

முன்னாள் பாஜக அமைச்சர் ஹரக் சிங் ராவத் காங்கிரஸில் இணைக்கப்பட்டாலும், அவர் தேர்தலில் களமிறங்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக அவரது மருமகள் லான்ஸ்டவுன் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கலாம் என கூறப்படுகிறது. இப்போது இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ஹரக் சிங் ராவத் இந்த யோசனைக்கு உடன்படுவதாகத் தெரிவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோரிக்கை நிராகரிப்பு

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு தேர்தல் போட்டியிட போவதில்லை என, வேட்பாளர் பட்டியில் அறிவிப்பதற்கு முன்பு கடிதம் எழுதியுள்ளது அக்கட்சியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே அதிருப்தியில் இருந்த ராவத், தான் விரும்பும் தொகுதியில் தனக்கு சீட் கிடைக்காது என்று உணர்ந்ததாகவும், அதனால் தான் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராவத் தோய்வாலாவிலிருந்து ராய்ப்பூருக்கு மாற விரும்புவதாக தகவல் வெளியானது. இதையறிந்த ராய்பூர் தொகுதி எம்எல்ஏ உமேஷ் சர்மா காவ் டெல்லி விரைந்தார். தனது சீட் பறிக்கப்பட்டால், பதவியை ராஜினாமா செய்வேன் என்று கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.ஆனால், அப்படி நடக்காது என கட்சி மேலிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் வேட்பாளர்கள் குறித்த விவாதங்கள் நடந்தபோதும், போட்டியிடப் போவதில்லை என்ற தனது முடிவை கட்சித் தலைமைக்கு ராவத் தெரிவிக்கவில்லை என்று கட்சி உள்விவகாரர்கள் தெரிவித்தனர்.

முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே அதிருப்தியில் இருந்த ராவத், தான் விரும்பும் தொகுதியில் தனக்கு டிக்கெட் கிடைக்காது என்று உணர்ந்ததாகவும், அதனால் தான் நட்டாவுக்கு விருப்பமில்லை என கடிதம் எழுதியுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கிசுகிசுத்தன

ரிட்டன் ஆஃப் மிலன்

இந்திய கடற்படை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் பலதரப்புப் பயிற்சியான மிலன், 2020 இல் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால், இம்முறை கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தாலும், மிலனை நடத்திட கடற்படையினர் தீவிரமாக உள்ளனர். மிலன் 2022 மிகப்பெரிய அளவில் நடத்திட திட்டமிட்டுள்ளனர். சுமார் 45 நாடுகள் பங்கேற்கவுள்ளனர்.

இது‘தோழமை-ஒற்றுமை-ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளுடன் பிப்ரவரி கடைசி வாரத்தில் பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. பயிற்சியின் இறுதி திட்டமிடல் மாநாடு டெல்லியில் நடைபெறும். இதில் பங்கேற்கும் நாடுகளின் ராணுவ பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Congress Vs Bjp Uttarakhand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment