ஹர்திக் படேலுக்கு 2 ஆண்டு ஜெயில்: குஜராத் கலவர வழக்கில் தீர்ப்பு

50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியது குஜராத் நீதிமன்றம்

By: Published: July 25, 2018, 2:59:41 PM

குஜராத் மாநிலத்தில் படேல் என்ற சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களை பிற்படுத்தவர்கள் பட்டியலில் சேர்த்து, இடஒதுக்கீட்டு சலுகைகள் வழங்கக் கோரி இரண்டு வருடங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களை வழி நடத்துபவர்களில் மிகவும் முக்கியமானவர் ஹர்திக் படேல் (Hardik Patel) ஆவார்.

2015ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற வன்முறையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ருஷிகேஷ் படேல் அவரின் அலுவலகம் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டது. இந்த வன்முறையில் ஈடுபட்டதாக 17 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் 14 பேரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது குஜராத் நீதிமன்றம்.

ஹர்திக் படேல், லால்ஜி படேல், மற்றும் ஏ.கே படேல் ஆகிய மூவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டது. மேலும் ஹர்திக் படேலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் 50000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.

To read this article in English

தீர்ப்பு வெளியான பின்பு, முகநூலில் நேரடி காணொளியில், தன்னுடைய ஆதரவாளர்களை பொறுமை காக்கும்படி வேண்டிக் கொண்டார் ஹர்திக் படேல்.

2015ம் ஆண்டு படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம், வன்முறையில் முடிந்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Hardik patel gets two years jail 2015 patidar riots case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X