Advertisment

தலைமைக்கு சவால் விடுக்கும் ஹரிஷ் ராவத்… உத்தரகாண்ட் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் யார்?

பல தேர்தலை சந்தித்த மூத்த தலைவர் ராவத், அவரது தலைமையில் கீழ் தான் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் என்பதை மேலிடம் உறுதிப்படுத்த விரும்பினார்.

author-image
WebDesk
New Update
ஹரிஷ் ராவத்

உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சியிந் முதலமைச்சர் வேட்பாளர் நான் தான் என்பதை வெளிப்படையாக சொல்லமால் கட்சியினருக்கு சிக்னல் கொடுக்க டெல்லி தலைமையை ஹரிஷ் ராவத் வலியுறுத்தியுள்ளார்.தேர்தல் பிரச்சாரங்களை கையாளும் ஹரிஷ் ராவத்துக்கு திடீரென வந்த சந்தேகம், ஒரு சுவாரஸ்ய நிகழ்வாகும்.

Advertisment

உத்தரகாண்டில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள இரண்டு தொழிலதிபர்கள் டேராடூனில் அவரைச் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, அவருக்கு நிதியுதவியும் வழங்கியுள்ளனர். பின்னர், அதே நபர்கள் டெல்லியில் முக்கிய தலைவரை சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் நிதியுதவி அளித்த நபர் ஆட்சிக்கு வருவார் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றதாக சந்தேகிக்கப்பட்டது.

கட்சி ஆட்சிக்கு வந்தாலும், முதலமைச்சர் ராவத் ஆகுவறா என்பது சந்தேகம் என அந்த தலைவர் சொன்னது, ராவத்தின் காதுக்கு வந்துள்ளது. இது அவரை வருத்தமடைய செய்துள்ளது. பல தேர்தலை சந்தித்த மூத்த தலைவர் ராவத், அவரது தலைமையில் கீழ் தான் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் என்பதை மேலிடம் உறுதிப்படுத்த விரும்பினார். அதாவது, உத்தரகாண்டில் ஆட்சி அமைந்தால் ராவத் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை நேரடியாக சொல்லாமல் கட்சியினருக்கு புரியவைக்க விரும்பினார்.

கேமரூன் மேக்கேயின் புதிய பதவி

இந்தியாவுக்கான அடுத்த உயர் தூதராக கேமரூன் மேக்கேயை கனடா நியமித்துள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில், அந்த பதவியில் இருந்த நாதிர் படேல் வெளியேறினார். மேக்கே 2019 முதல் 2021 வரை இந்தோனேசியா மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளில் கனடாவின் தூதராக இருந்தார்.

1995 இல் கனடா வெளியுறவு அமைச்சகத்திலும், 2008 முதல் 2010 வரை பிராந்திய வர்த்தகக் கொள்கையின் இயக்குநராகவும்,2012 முதல் 2013 வரை சீன வர்த்தகக் கொள்கைக்கான இயக்குநர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.

இதுதவிர 2013 முதல் 2015 வரையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் பணியகத்திலும், 2015 முதல் 2017 வரை வர்த்தகப் பிரிவு பணியகத்திலும் இயக்குநர் ஜெனரலாக இருந்தார். அண்மையில், ஒட்டாவாவில், தனியுரிமை கவுன்சில் அலுவலகத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை செயலகத்தில் செயல்பாட்டு இயக்குநராக பணியாற்றினார். 2010 முதல் 2012 வரை கோஸ்டாரிகா, ஹோண்டுராஸ் மற்றும் நிகரகுவாவில் கனடாவின் தூதராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரியத்தில் மாற்றம்

ஜம்மு காஷ்மீர் நிர்வாக சேவையின் மூத்த அதிகாரிகளின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் நிறைவு விழாவில் சிறப்புரையாற்றிய பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நினைவு பரிசுகளை வழங்க மறுத்துவிட்டார்.

பொதுவாக, பெரும்பாலான அரசு நிகழ்வுகளைப் போலவே, பங்கேற்பாளர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அரசுக்கு தேவையற்ற செலவான நினைவுச் சின்னங்கள் வழங்கும் நடைமுறையை அரசு நிறுத்துவதாக அமைச்சர் கூறினார். அதன் காரணமாக, 1999 முதல் 2002 வரையிலான ஜே & கே நிர்வாக சேவையின் 29 அதிகாரிகள், பயிற்சி பெற்றவர்கள் பெயர்கள் மட்டும் விழாவில் குறிப்பிடப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Congress Uttarakhand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment