ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடம் என்றும் அதே சமயம் வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி உடன் இணைந்து போட்டியிடும் என்றும் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் (ஏ.ஏ.பி) தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
லோக்சபா தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது, அதே சமயம் ஹரியானா சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் அதாவது அக்டோபரில் நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதில் விருப்பம் இல்லை என்று ஹரியானா காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (சிஎல்பி) தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறிய சில நாட்களுக்குப் பிறகு கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் 10 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
ஜிண்டில் “பத்லவ் ஜனசபா”வில் உரையாற்றிய கெஜ்ரிவால், மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்றார். அக்கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவது இதுவே முதல்முறை. 2019 சட்டமன்றத் தேர்தலில், கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி 46 இடங்களில் போட்டியிட்டது, ஆனால் 0.48% வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றிடத்தைப் பெற்றது.
“ஒட்டுமொத்த மாநிலமும் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறது. இன்று, மக்கள் ஒரே ஒரு கட்சி மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் அது ஆம் ஆத்மி மட்டுமே" என்று கெஜ்ரிவால் கூறினார்.
ஒவ்வொரு கிராமத்திலும் 15-20 பேர் கொண்ட குழுவைக் கொண்ட மாநிலத்தின் மிகப்பெரிய அமைப்பை ஆம் ஆத்மி கொண்டுள்ளது என்று அவர் கூறினார். “கடந்த ஆறு மாதங்களில் மாநிலத்தில் ஏறக்குறைய 1.25 லட்சம் பேர் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளாக மாறியுள்ளனர். இது ஏன் நடந்தது? கடந்த 75 ஆண்டுகளாக மற்ற அனைத்து கட்சிகளையும் பார்த்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்,'' என்றார்.
டெல்லி மற்றும் பஞ்சாப் நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, ஆம் ஆத்மி தலைவர் ஹரியானாவில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்கிறது.
தொடர்ந்து மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசாங்கத்தை கெஜ்ரிவால் கடுமையாக சாடினார். மாநிலத்தில் இருந்து 10,000 இளைஞர்களை வேலைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பும் அரசின் திட்டத்தையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அண்டை மாநிலமான பஞ்சாபில் தனது கட்சியின் அரசாங்கம் 42,000 அரசு வேலைகளை உருவாக்கியுள்ளது என்று கூறிய கெஜ்ரிவால், “அரியானா அரசு, மாநில இளைஞர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது, அங்கு போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. கட்டார் சாஹாப், இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியாவிட்டால் குர்சியை (நாற்காலியை) விட்டு விடுங்கள். நாங்கள் அவர்களுக்கு வேலை கொடுப்போம், ஆனால் அவர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப வேண்டாம்” என்று டெல்லி முதல்வர் கூறினார்.
ஆம் ஆத்மியின் தேர்தல் செயல்திறன்
கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் நோட்டாவை விட (0.53%) குறைவான வாக்குகளைப் பெற்றனர், பெரும்பாலான வேட்பாளர்கள் 1,000 வாக்குகளை கூட பெறாமல் டெபாசிட்களை இழந்தனர்.
2019 மக்களவைத் தேர்தலில், அக்கட்சி துஷ்யந்த் சௌதாலா தலைமையிலான ஜனநாயக் ஜனதா கட்சியுடன் (ஜேஜேபி) கூட்டணி வைத்து, அம்பாலா, கர்னால் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய மூன்று இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது - 2%க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/kejriwal-unveils-split-haryana-strategy-aap-contest-assembly-polls-solo-ls-seats-india-9132200/
சமீபத்திய பின்னடைவுகள்
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிர்மல் சிங், மாநில துணைத் தலைவர் சித்ரா சர்வாரா மற்றும் மாநில பிரச்சாரக் குழுத் தலைவர் அசோக் தன்வார் ஆகியோர் கட்சியில் இருந்து விலகியதன் மூலம் சமீப காலங்களில் மூன்று பெரிய அடிகளை எதிர்கொண்டது. சிங்கும் சர்வாராவும் காங்கிரஸுக்குத் திரும்பியபோது, தன்வார் பாஜகவில் சேர்ந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.