Haryana Assembly Election Exit Polls 2024 Result: ஹரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த தேர்தலில், 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில், முதல்வர் நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.
ஹரியானா முழுவதும் 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. 90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹரியானா சட்டசபை தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில், 2 முறை ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க. 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது. தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து வாக்கு மையத்தில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஹரியானா சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு 2024 முடிவுகள்
இந்நிலையில், ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு 2024 முடிவுகள் இன்று மாலை வெளியாக இருக்கிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், கருத்துக் கணிப்புகள் வெளியாகும். ஹரியானாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி பங்கஜ் அகர்வால், மாலை 6:30 மணிக்கு முன் கருத்துக் கணிப்புகளை நடத்துவது அல்லது வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை என்.டி.டி.வி, இந்தியா டுடே மற்றும் ரிபப்ளிக் டிவி போன்ற முக்கிய செய்தி சேனல்களில் பார்க்கலாம். இதேபோல், இந்தியா டுடே, ஆஜ் தக், பிசினஸ் டுடே மற்றும் சமூக ஊடக தளங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்திலும் பார்க்கலாம்.
கவனிக்க வேண்டிய முக்கிய வேட்பாளர்கள்
- லட்வாவைச் சேர்ந்த நயாப் சிங் சைனி (பா.ஜ.க), காங்கிரஸின் மேவா சிங்கை எதிர்கொள்கிறார்.
- பூபிந்தர் சிங் ஹூடா (காங்கிரஸ்) கர்ஹி சாம்ப்லா-கிலோயிலிருந்து, மஞ்சு ஹூடாவை (பா.ஜ.க) எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
- அம்பாலா கான்ட்-வில் பரிமளா பாரி (காங்கிரஸ்) உடன் போட்டியிடும் அனில் விஜ் (பாஜக).
- முன்னாள் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகட், ஜூலானாவிலிருந்து காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
- துஷ்யந்த் சௌதாலா (ஜே.ஜே.பி) உச்சன கலனைச் சேர்ந்தவர்.
ஹரியானா அரசியல் கூட்டணிகள்
2019 தேர்தலில் ஹரியானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. பா.ஜ.க 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி 10 இடங்களிலும் வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சி அமைப்பதில் கிங் மேக்கராக மாறியது. இருப்பினும், கூட்டணி 2024 மார்ச்சில் சரிந்தது, அப்போதைய முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்தார். நயாப் சிங் சைனி முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் மே 2024 இல் மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் அவரது சிறுபான்மை அரசாங்கம் தடைகளை எதிர்கொண்டது.
பூபிந்தர் சிங் ஹூடா தனது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், பா.ஜ.க-வின் போராட்டங்களையும், ஆட்சிக்கு எதிரான உணர்வையும் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் நம்புகிறது.
ஹரியானா தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள்:
கருத்துக்கணிப்பாளர் | பா.ஜ.க | காங்கிரஸ்+ | மற்றவை |
இந்தியா டுடே- சி.வோட்டர் | 0-0 | 0-0 | 0-0 |
டைம்ஸ் நவ் | 22-32 | 50-64 | 2-8 |
செய்தி 24-சாணக்யா | 18-24 | 55-62 | 2-5 |
இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் | 0-0 | 0-0 | 0-0 |
ரிபப்ளிக் டிவி- பி மார்க் | 18-24 | 55-62 | 2-5 |
முந்தைய சட்டசபை தேர்தலில், பெரும்பாலான கருத்து கணிப்புகள், பா.ஜ.,வுக்கு தீர்க்கமான வெற்றியை கணித்திருந்தன. இந்தியா டுடே பாஜகவுக்கு 38 இடங்களும், காங்கிரஸுக்கு 36 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 8 இடங்களும் கிடைக்கும் என்று கணித்திருந்தது. இதேபோல், ஏபிபி-சி வோட்டர் பிஜேபிக்கு 72 இடங்களும், காங்கிரஸுக்கு 8 இடங்களும், நியூஸ் 18-ஐபிஎஸ்ஓஎஸ் பாஜகவுக்கு 75 இடங்களும், காங்கிரஸுக்கு 10 இடங்களும் கிடைக்கும் என்று கணித்திருந்தது.
ஆனால், அந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டமன்றம் உருவானது. இறுதியில் ஜேஜேபி மற்றும் பல சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.