ஹரியானாவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று மகேந்திரகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Advertisment
பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி , இந்த ஆட்சியின் பிரித்தாலும் மனப்பான்மையால் உலகத்திற்கு முன்பு ஒரு சிரிப்பு பொருளாய் விளங்குகிறது என்றார். மற்ற மதங்களை பகைமையாய் பார்க்க வைப்பது , ஜாதிப் பிளவை ஊக்குவிப்பது போன்றவைகளே தான் இந்த அரசின் சாதனையாக விளங்கப்படும். பாஜக கட்சி எங்கே சென்றாலும், அங்கே மக்கள் பேதமைக்கான அடித்தளம் கட்டமைக்கப்டுகிறது . மேலும், பொருளாதார மந்தநிலையை சரிசெய்வதை விட்டுவிட்டு, அர்த்தமற்ற விஷயங்களில் மக்கள் கவனத்தை திசை திருப்புவதிலேயே அரசு கவனம் செழுத்துகிறது, என்று ராகுல் காந்தி பிரசாரத்தில் கூறினார்.
மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தை கிடப்பில் போட்டது , இந்த ஆட்சி பொருளாதார யுக்திகள்யின்றி தடுமாறுகிறது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது . பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, கப்பர் சிங் வரி (ஜி.எஸ்.டி ) போன்றவைகளால் இந்தியாவின் சிறு குறு வியாபாரிகளின் வாழ்வு சிதைந்திருக்கின்றன என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஹரியானா மாநிலத் தேர்தல் : சிறப்பு வீடியோ
முன்னதாக, ஹரியானா வில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட நரேந்திர மோடி, ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஏற்கனவே தோல்வியை ஒத்துக் கொண்டுவிட்டது, ஒட்டுமொத்த ஹரியானா மாநில மக்களும் பாஜக கட்சிக்கு ஆதர்வு என்றும் தெரிவித்தார்.