Haryana New CM Nayab Singh Saini | பாஜக மாநிலத் தலைவரும் குருக்ஷேத்ராவின் எம்பியுமான நயாப் சிங் சைனி ஹரியானா முதல்வராக பதவியேற்க உள்ளார். அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக மனோகர் லால் கட்டார் மற்ற பாஜக அமைச்சர்களுடன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், புதிய அமைச்சரவையில் ஜேஜேபி பிரதிநிதிகள் யாரும் இருக்க வாய்ப்பில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பாஜகவின் லக்ஷ்மண் சிங் யாதவ், "ஜேஜேபியுடன் இனி எந்தக் கூட்டணியும் இல்லை" என்று கூறினார். இது குறித்து அவர், "பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், மனோகர் லால் கட்டார் முதலமைச்சர் பதவிக்கு நயாப் சிங் சைனியின் பெயரை முன்மொழிந்தார். இது ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது” என்றார்.
நயாப் சைனி, இன்று மாலை சுமார் 5 மணிக்கு புதிய அமைச்சர்கள் குழுவுடன் சைனி பதவியேற்கிறார்.
காங்கிரஸ் விமர்சனம்
இதற்கிடையில், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மல்யுத்த வீரர்களின் அழுத்தத்தால் ஹரியானாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் மாற்றத்திற்கான நேரம் இது என்றும் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Haryana News Live Updates: Nayab Singh Saini to replace Manohar Lal Khattar as Haryana CM
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“