Haryana | ஹரியானா ஐஎன்எல்டி (இந்திய தேசிய லோக் தளம்) தலைவர் நஃபே சிங் ரதீ மற்றும் அவரது கூட்டாளி ஞாயிற்றுக்கிழமை ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கர் என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முன்னாள் எம்எல்ஏ எஸ்யூவி காரில் பயணித்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்ததாக ஐஎன்எல்டி செய்தித் தொடர்பாளர் ராகேஷ் சிஹாக் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார்.
இந்தத் தாக்குதலில், ஜஜ்ஜரின் மண்டோதி கிராமத்தில் வசிக்கும் ஜெய் கிஷன் என்பவரும் உயிரிழந்தார். மேலும், இந்த தாக்குதலில் மூன்று தனியார் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் புல்லட் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர், நான்கு பேர் தோட்டாக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இருவர் மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தோள்பட்டை, தொடை மற்றும் மார்பின் இடது பக்கத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
ரதி 1996 மற்றும் 2005ல் இரண்டு முறை பஹதுர்கரில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Haryana INLD chief Nafe Singh Rathee, his associate shot dead in Bahadurgarh
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“