Advertisment

காசோலை வழக்கு; மத்திய அமைச்சர்களின் ஊழியர்கள் எனக் கூறி சிலர் என்னை தொடர்பு கொண்டனர்: நீதிபதி பரபர பேச்சு

நீதிபதி குற்றஞ்சாட்டிய நிலையில், அமைச்சர்கள் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Haryana

Haryana

வழக்கு ஒன்றை ஒத்திவைக்க கோரி இரண்டு மத்திய அமைச்சர்களின் ஊழியர்கள் என்று கூறிக் கொண்டு சிலர் என்னை தொடர்பு கொண்டனர் என ஹரியானாவின் குருக்ஷேத்ரா நீதிபதி பரபரப்பு கருத்து தெரிவித்தார். காசோலை முறைகேடு வழக்கு (Cheque bounce case) தொடர்பாக விசாரணையை நீண்ட காலம் ஒத்திவைக்கக் கோரி என்னை மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைத்தும், குறுஞ்செய்தி அனுப்பியும் வலியுறுத்தினர் என்று கூறினார்.

Advertisment

குருக்ஷேத்ரா கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆஷு குமார் ஜெயின் ஜூலை 6 அன்று வெளியிட்ட நீதித்துறை உத்தரவில், இம்சம்பவம் குறித்து விவரித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற அழுத்த தந்திரங்களை செய்யக் கூடாது என்றும் மீறினால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

M/s ஷ்யாம் ஓவர்சீஸ் & ஆர்ஸ் மற்றும் ஹரியானா அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் இடையேயான வழக்கில் இச்சம்பவம் நடந்துள்ளது.

தற்போது ஜாமீனில் உள்ள ஷியாம் லால், பீனா தேவி மற்றும் மோஹித் கர்க் ஆகிய மூன்று பேர், 2018ல் Negotiable Instruments Act சட்டத்தின் 138வது பிரிவின் கீழ் ஒரு குற்றப் புகாரில் தங்களின் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர்.

இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி, நடுவர் மன்ற நடவடிக்கைகள் முடிவடையும் வரை மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்குத் தடை கோரி மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்பின் அழைப்புகள் வந்ததாக கூறினார்.

இந்த வழக்கை நீண்ட நாட்களுக்கு ஒத்திவைக்க கோரி மத்திய அமைச்சர்களின் பெயரில் பல்வேறு மொபைல் எண்களில் இருந்து மீண்டும் மீண்டும் அழைப்புகள் வந்தது. நீதிமன்றத்தை அணுக முயன்றனர்.

28.06.2023 அன்று, ஒரு மொபைல் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது… பெண் ஒருவர் பேசினார். அவர் தன்னை மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் இந்த வழக்கை நீண்ட காலம் ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நீதிமன்றத்தில் வழக்குகள் முறையாக விசாரணை செய்யப்படுகிறது. பரிந்துரைகளின் அடிப்படையில் அல்ல என்று நான் அவரிடம் கூறி வைத்தேன் என்றார்.

தொடர்ந்து 01.07.2023 அன்று வேறு மொபைல் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதில் அழைப்பு விடுத்தவர் தன்னை மத்திய சட்ட அமைச்சரின் தனிப்பட்ட செயலர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வழக்கை ஒத்திவைக்கக் கோரினார். பரிந்துரைகளின் அடிப்படையில் வழக்கு நடப்பது இல்லை. முறையாக விசாரணையின் படி வழக்கு விவாரிக்கப்படும் என்று கூறினேன்.

எஸ்.எம்.எஸ்

இவ்வழக்கில் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்த நாளான ஜூலை 6 ஆம் தேதியும் தனக்கு அழைப்புகள் வந்ததாக நீதிபதி கூறினார். . "இன்றும், அந்த எண்களில் இருந்து 7 அழைப்புகள் வந்துள்ளன என்று கூறி எண்களை காண்பித்தார்".

நீதிபதி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், மேல்முறையீடு செய்தவர்கள், ஒரு மொபைல் எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பியதாகவும் கூறினார்.

“குட் மார்னிங் சார், சார் நான் சச்சின் ஷிண்டே. மாண்புமிகு அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலின் தனிப்பட்ட செயலாளர், சட்ட அமைச்சகம் டெல்லி. ஜூலை 1ஆம் தேதி உங்களுடன் அக்ரோ வழக்கு தொடர்பாக பேசினேன், இன்று மீண்டும் வழக்கு விசாரணை. இன்று விசாரணையில் 5-6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். ஏனெனில்… பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை. பட்டியல் எண் -43 M/s. ஷியாம் லால் ஓவர்சீஸ் Vs. ஹரியானா அக்ரோ இண்டஸ்ட்ரீஸ். வழக்கு எண். CRA/14/2018” என்று அனுப்பபட்டுள்ளது.

அமைச்சர்கள் விளக்கம்

மேலும் நீதிபதி கூறுகையில், "நான் மொபைல் எண்ணை ப்ளாக் செய்ததால் மேல்முறையீடு செய்தவர்கள் மற்றொரு மொபைல் எண்ணிலிருந்து அழைப்புகளை செய்யத் தொடங்கினர். 3 அழைப்புகளை எடுக்கவில்லை. 4-வது அழைப்பை எடுத்து பேசிய போது, தன்னை மத்திய சட்ட அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் எனக் கூறி அதே நபர் மீண்டும் பேசினார். நான் அவரை எச்சரித்தேன்" என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “எங்கள் அலுவலகத்தில் எந்த வழக்கையும் நாங்கள் விவாதிக்கவில்லை. நீதிபதிகளிடம் பேசுவது எங்கள் வழக்கம் அல்ல. இதற்க்கும் எனக்கும், என் அலுவலகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

இதுகுறித்து அமைச்சரின் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், “எங்கள் அலுவலகத்தில் இந்த பெயரில் யாரும் இல்லை, எங்கள் தரப்பிலிருந்து அத்தகைய அழைப்போ அல்லது தகவல்தொடர்புகளோ செய்யப்படவில்லை” என்றார்.

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் பசுபதி குமார் பராஸின் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், அமைச்சரின் ஊழியர்களில் பெண் யாரும் இல்லை என்று கூறினார். உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளர் பிரசன்ன குமார் சாஹி கூறுகையில், அமைச்சரின் ஊழியர்களில் இதுவரை பெண் யவரும் இல்லை. பராஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், அவரது ஊழியர்களில் பெண் ஊழியர்கள் இல்லை என்று சாஹி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment