பாஜக ஜார்கண்ட் தேர்தல் பொறுப்பாளரும், அசாம் முதல்வருமான ஹிமந்தா சர்மாவின் தேர்தல் பேச்சுக்கள் "மிகவும் பிளவுபடுத்துவது" மற்றும் "வெறுக்கத்தக்க" பேச்சுகளாக உள்ளன என்று கூறி, இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் அவருக்கு எதிராக "உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கையை" கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) ஆகியவை சமர்ப்பித்த கடிதத்தில், ஹிமந்த சர்மா முஸ்லிம்களை குறிவைத்து நவம்பர் 1ஆம் தேதி சரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச்சியில் பேசினார் என்று புகார் அளித்தனர்.
புகார் அளித்த பின் சனிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் புகார் கடிதத்தை காண்பித்தனர். அந்த புகாரில், சர்மா "ஊடுருவுபவர்கள்" போன்ற "விஷ வார்த்தைகளை" பயன்படுத்தி வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவதாகவும்,
காங்கிரஸ் சிறுபான்மைத் தலைவர்களைக் குறிவைத்து அவர் பேசுவதாகவும் அதற்கான ஆதராத்தை இணைத்தும் புகார் அளித்தனர்.
மேலும், இன்னும் 24 மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அதில் கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“