Advertisment

ஹத்ராஸில் எவருக்கும் அனுமதி இல்லை; இரவு பகலாக காவல் காக்கும் 300 காவலர்கள்!

கிராமம், சாலைகள் மற்றும் நிலங்களை இரவிலும் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ஹத்ராஸில் எவருக்கும் அனுமதி இல்லை; இரவு பகலாக காவல் காக்கும் 300 காவலர்கள்!

 Somya Lakhani , Jignasa Sinha , Amil Bhatnagar

Advertisment

Hathras: 300 police personnel lock down grieving family, entire village : 19 வயது தலித் பெண் ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், அந்த கிராமத்தையே, 300க்கும் மேற்பட்ட காவலர்கள், 17 காவல் வண்டிகள், 5 பேரிகேட்கள் கொண்டு, யாரும் உள்நுழையாதபடி ஒரு கோட்டையை உருவாக்கியுள்ளது உ.பி. மாநில அரசு.

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், கடந்த இரண்டு நாட்களாக வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் அவர்களின் செல்போன்கள் கண்காணிக்கப்படலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மாவட்ட் ஆட்சியர் இங்கு வந்து, மீடியாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் எவ்வாறு எங்களின் வீடியோக்கள் வைரலானது என்று கேட்டார் என்று அந்த பெண்ணின் அண்ணன் போனில் பேசினார்.

ஹத்ராஸ் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அந்த பெண்ணின் கிராமத்தில் இருந்து 2.5 கிமீ அப்பால் மூன்று நுழைவு பகுதியிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளது. இதில் ஒன்றை தாண்டி தான் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டேரக் ஓ, ப்ரையன், ககோலி கோஷ் தஸ்திடார், ப்ரதிமா மண்டல், மற்றும் முன்னாள் எம்.பி. மமதா தாக்கூர் ஹத்ராஸ் செல்ல முயன்றனர்.

சரியாக 12:20 மணி அளவில் எம்.பிக்கள் ஹத்ராஸூக்குள் செல்ல முயன்றனர். தேரக், அங்கிருக்கும், ஹத்ராஸின் இணை மாவட்ட ஆட்சியர் ப்ரேம் பிரகாஷ் மீனா உட்பட, அதிகாரிகளால் தள்ளிவிடப்பட்டார். நாங்கள் பெண் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டோம். எங்களில் இருவரையாவது உள்ளே அனுப்புங்கள். நாங்கள் மம்தா பானர்ஜியால் இங்கு அனுப்பப்பட்டோம். விரைவில் திரும்பிவிடுவோம் என்று கேட்டோம் என்று தஸ்திதர் கூறினார். இதற்கு பதில் கூற மறுத்துவிட்டார் ப்ரேம் பிரகாஷ். வியாழக்கிழமை ராகுல் மற்றும் ப்ரியங்கா காந்தி அந்த கிராமத்திற்கு செல்வதற்கு முன்பு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஊடகங்கள், கட்சித் தலைவர்கள், உள்ளூர்வாசிகள் என ஒருவரும் உள்ளே நுழையவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளே ஒரு மருத்துவமனை உள்ளது, எனவே யாராவது அங்கு செல்ல விரும்பினால் சிக்கல் எழும். நாங்கள் பால் வேன்களை மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கிறோம், ”என்று மூத்த அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் விர், மாவட்ட ஆட்சியர் ப்ரவீன் குமார் லக்ஸ்கர் இது தொடர்பான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் ஏதும் பேசவில்லை. அலிகர் கோட்டத்தின் ஐ.ஜி. பியூஷ் மொர்தியா, “சிறப்பு விசாரணைக்குழு இங்கு வந்த பொழுதில் இருந்து இப்பகுதி மிகவும் சென்சிட்டிவாக இருக்கிறது. அவர்கள் இங்கிருந்து சென்ற பிறகு நீங்கள் தாரளமாக அப்பகுதியை பார்வையிடலாம்” என்று கூறினார்.

“ஹத்ராஸின் அனைத்து காவல் நிலையங்களையும் தவிர, மதுரா, ஆக்ரா, அலிகார், கஸ்கஞ்ச் மற்றும் எட்டா ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் இங்கு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் இப்போது மூன்று நாட்களாக 12 மணி நேரம் பணியில் இருக்கிறோம் ”என்று மூத்த அதிகாரி கூறினார். காவலர்கள் அனைவரும் கலகத்தை அடக்க வழங்கப்படும் ஆடைகளையும், தலைக்கவசங்களையும் அணிந்து லத்திகளுடன் வலம் வந்தனர்.

மாவட்ட ஆட்சியர் லக்ஸ்கர், “அவர்கள் அறிக்கைகளை மாற்றுவது அவர்களிடம் தான் இருக்கிறது” “நிர்வாகத்தினால் கூட அதனை மாற்ற இயலும்” என்று பேசிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான பிறகு, தங்களின் போன்கள் கண்காணிக்கப்படுகிறதோ என்ற அச்சத்தில் அந்த குடும்பத்தினர் இருக்கின்றார்கள். ஏ.என்.ஐயிடம் பேசிய லக்ஸ்கர், விசாரணை தொடர்பாக அவர்களிடம் ஏற்பட்டிருந்த அச்சத்தை போக்கவே நான் அங்கு சென்றேன் என்று கூறினார். அதிகாரிகள், சிறப்பு விசாரணைக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் மட்டும் அக்குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

publive-image அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட தேரக்

வெள்ளிக்கிழமையன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பலமுறை இறந்த பெண்ணின் உறவினர்கள், சகோதரர்கள், அத்தைகள் என பலருக்கும் போன் செய்தது. ஒரே ஒரு சகோதரர் மட்டுமே அழைப்பை எடுத்தார். ஆனால் அந்த போனும் சிறிது நேரத்தில் ஸ்விச் ஆஃப் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் உறவினர் என்று கூறும் சிறுவன் ஒருவன் தடுப்புகள் மீது ஏறி நின்று, 10:30 மணி அளவில், உள்ளே நிறைய காவல்துறையினர் இருக்கின்றனர், குறிப்பாக வீட்டுக்கு வெளியே. அவர்கள் எங்களை யாருடனும் பேச வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஆனால் குடும்பத்தினர் ஊடகத்தாரிடம் பேச விரும்புகிறார்கள். எங்களால் கடைக்கு கூட செல்ல இயலவில்லை. கூரைகளிலும் காவல்துறையினர் நிற்கின்றனர் என்று அச்சிறுவன் கூறினான்.

மாலை 4 மணியளவில், வேறொரு கிராமத்திலிருந்து வந்த அப்பெண்ணின் சித்தப்பாவும் , சித்தியும் தடுத்து நிறுத்தப்பட்டனர். “நாங்கள் குடும்பத்துடன் பேச முடியவில்லை. அவர்களின் போன் ரீச் ஆகவில்லை. நாங்கள் மிகவும் கவலை அடைந்ததால் இங்கே வந்தோம்” என்று கூறிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த கிராமத்தை சுற்றிலும் 250 காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். 4 பிரிவு - Provincial Armed Constabulary (PAC)- 48 காவலர்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், உ.பி. காவல்துறையின் 12 வாகனங்கள், மூன்று லாரிகள், பி.ஏ.சியின் 2 பேருந்துகள் மற்றும் 2 தீயணைப்பு வாகனங்களை கண்டது. எப்போதாவது, சீருடை அணிந்த காவல் பணியாளர்களைக் கொண்ட தனியார் மற்றும் அரசு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

அக்கிராமத்தை சேர்ந்த, புறநகரில் கடை வைத்திருப்பவர், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் "எல்லா இடங்களிலும் காவல்துறையினர் நிற்கின்றனர். விவசாய நிலங்களில், தெருக்களில், சில மொட்டை மாடிகளிலும் அவர்கள் நிற்கின்றனர்." என்று கூறினார். அவர் தனது கடையைத் திறக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக வழக்கமான காலை 9.30 க்கு பதிலாக வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினார்.

"காவல்துறையினரால் பொழுது புலரும் போது, வெளியேறுமாறு எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஊடகங்களுடன் பேச வேண்டாம் என்றும் அவர்கள் எங்களிடம் கூறியுள்ளனர் ... பிரிவு 144 அமல்படுத்தப்பட்டுள்ளதால் கூட்டம் சேர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. யாரும் வெளியேறவில்லை; பலரும் அதிக அளவு காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருப்பதை செய்திகளிலிருந்து தெரிந்துகொள்கிறார்கள் ” என்று அவர் கூறினார். 3 மணி அளவில் லைன்மேன் ஒருவர் தன்னை உள்ளே விடவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவர் முயற்சி வீண் ஆனது. இரவு ஆனபோதும் தடுப்புகள் நீக்கப்படவில்லை. 8 மணிக்கு பணி மாறும். கிராமம், சாலைகள் மற்றும் நிலங்களை இரவிலும் கண்காணிக்க எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment