உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் 'போலே பாபா' என்ற மத போதகரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நேற்று (ஜூலை 3) நடந்தது. 300 பேர் அளவில் மட்டுமே பங்கேற்கக்கூடிய இடத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் வரை பங்கேற்றதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சு திணறி தற்போது வரை 116 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் பெரும்பாலாலேர் பெண்கள் ஆவர். இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மத போதகர் 'போலே பாபா' யார் என்பது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாராயண் சாகர் விஷ்வ ஹரி அல்லது போலே பாபா என்று தற்போது அழைக்கப்படும் இவரின் உண்மையான பெயர் சூரஜ் பால் சிங், உத்தரபிரதேச காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
58 வயதான சிங், காஸ்கஞ்ச் மாவட்டத்தின் பகதூர் நகர் கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவர். இந்த கிராம் கூட்ட நெரிசல் ஏற்பட்ட ஹத்ராஸிலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Bhole Baba’ at centre of Hathras stampede: UP Police constable who became a self-styled preacher
10 ஆண்டு காலம் காவல்துறையில் பணியாற்றிய பிறகு, அவர் போலீஸ் வேலையை ராஜினாமா செய்துள்ளார்... அவர் கடைசியாக ஆக்ராவில் பணியாற்றி இருந்தார் என்று இந்த சம்பவத்திற்கு பிறகு விசாரணை செய்த போலீஸ் அதிகாரி கூறினார். சரியான தேதி தெரியவில்லை என்றாலும், சிங் 1990-களில் காவல்துறையில் இருந்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
பகதூர் நகர் கிராமத்தை சேர்ந்த ஜாபர் அலி கூறுகையில், “அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. காவல்துறையை விட்டு வெளியேறிய பிறகு, அவர் போலே பாபா என்ற பெயரை மாற்றிக் கொண்டார். அவர் மனைவி பெயர் மாதாஸ்ரீ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சிங்கின் குடும்பம் நன்றாக இருந்தது, மேலும் அவர் மூன்று சகோதரர்களில் இரண்டாவதுவர். அவரது மூத்த சகோதரர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரது இளைய சகோதரர் ராகேஷ், ஒரு விவசாயி, இன்னும் தனது குடும்பத்துடன் கிராமத்தில் வசிக்கிறார் என்றார்.
“அவர் கிராமத்தில் உள்ள தனது 30 பிகா நிலத்தில் ஒரு ஆசிரமம் கட்டினார். பிற மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் கூட, அவரது ஆசிர்வாதத்தைப் பெற மக்கள் ஆசிரமத்திற்கு வருவார்கள்; அவர்களுக்கு ஆசிரமத்தில் தங்குமிடம் வழங்கப்பட்டது,” என்று அலி கூறினார்.
மேலும், சிங் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தை விட்டு வெளியேறினார், அவருக்கு எதிராக சதி இருப்பதாக அலி சந்தேகம் தெரிவித்தார். அவர் இப்போது ராஜஸ்தானில் வசிக்கிறார் என்று கேள்விப்பட்டோம். கடந்த ஆண்டு, அவர் கிராமத்திற்குத் திரும்பி தனது சொத்துக்களை ஒரு அறக்கட்டளைக்கு ஒப்படைத்தார். ஒரு மேலாளர் ஆசிரமத்தின் விவகாரங்களை மேற்பார்வையிடுகிறார், ”என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“