சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி திடீர் ராஜினாமா!

11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

HC Chief Justice Tahilramani resigns : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான கொலீஜியம் எடுத்த, தஹில் ரமணியை மேகலாய உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்வது என்ற முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் நீதிபதி வட்டாரங்கள் கூறியுள்ளனர்.

ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜீயம் குழு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போது மேகலாய மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமணி பதவி உயர்வுபெற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவர், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவராவார். இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது 2017ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

இதுவரை இவர் மீது எந்த வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாத நிலையில் தலைமை நீதிபதியையும் சேர்த்து மொத்தம் மூன்று நீதிபதிகளே உள்ள நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டசிறிய நீதிமன்றமான மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு தஹில் ரமணி இடமாற்றம் மூத்த நீதிபதிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான கொலிஜியத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தஹில் ரமணி முன்பே கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து கொலிஜியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hc chief justice tahilramani resigns after collegium transfer order

Next Story
சந்திரயான் -2: விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்ததால் இஸ்ரோ சோகம்vikram lander Fails , Chandrayaan 2 failure , chandrayaan 2 news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com