இந்திய கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் விராட் கோலியை எல்லோருக்கும் பிடிக்கும். அவர் அந்த இடத்தை அடைய கடும் சிரமங்களை சந்தித்திருப்பார். ஆனால், விராட் கோலியை போன்று தோற்றம்கொண்டவரின் அனுபவங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும்? அதனாலேயே அவர் பல கஷ்டங்களை சுமக்க வேண்டியிருந்திருக்கும்.
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த அமித் மிஸ்ரா, விராட் கோலியை போலவே அச்சு அசலான தோற்றத்தைக் கொண்டிருக்கிறார். பொறியியல் படித்துக்கொண்டிருந்த அமித் மிஸ்ராவுக்கு ஆங்கரிங் செய்வதென்றால் விருப்பம்.
ஒருமுறை விமானத்தில் அமித் மிஸ்ரா பயணித்துக் கொண்டிருந்தபோது பாலிவுட் பிரபல இயக்குனர் இக்ரம் அக்தரை சந்தித்திருக்கிறார். அப்போது இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, தான் விராட் கோலியை போன்று தோற்றம் கொண்டிருப்பதாலேயே சந்தித்த சவால்கள் குறித்து அமித் மிஸ்ரா கூறியிருக்கிறார். அதைக்கேட்ட இக்ரம், அதையே திரைப்படமாக எடுக்க விரும்பி, அமித் மிஸ்ராவையே நடிக்க சொல்லியிருக்கிறார். அதற்கு முன்பு வரை அமித் மிஸ்ரா தான் ஒரு நடிகராவோம் என்று நினைத்திருக்கவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2017/12/28mabw686byqjkifaq0e-300x225.jpeg)
ஆனால், அமித் மிஸ்ரா தொழில்முறை நடிகர் அல்ல. அதனால், அவருக்கு நடிப்பு பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்தார் இயக்குனர் இக்ரம் அக்தர்.
இக்ரம் அக்தர் திரைப்படம் தவிர, அமித் மிஸ்ரா பல பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
விராட் கோலியிடமிருந்து அமித் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் அர்ப்பணிப்பு. “இன்றைக்கு நீ 90 ஆக இருக்கிறாய். 90.1-ஆக பயிற்சி மேற்கொள். 89.9-ஆக மாறிவிடாதே”, எனும் விராட் கோலியின் மேற்கோளை நினைவுப்படுத்துகிறார் அமித்.
விராட் கோலி போன்று இருப்பதாலேயே அமித் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார். ஒருமுறை பட புரொமோஷனுக்காக படக்குழுவினருடன் அமித் பெங்களூரு சென்றிருந்தார். அப்போது, ஒரு கும்பல் அவரை பிடித்துவைத்து தொல்லை தந்தது. இதனால், 10 பாதுகாவலர்களை வரவழைத்தே அமித்தை மீட்க வேண்டியிருந்தது.
”நான் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். ஆனால், சமூக வலைத்தளங்களில் எனக்கு நிறைய பேர் செய்திகள், நட்பு அழைப்பு அனுப்பி தொல்லை தருகின்றனர்”, என அமித் கூறுகிறார்.
தனக்கென்று தனி திறமைகளும், சிறப்பம்சங்களும் உள்ள நிலையில், அதனை தான் நிரூபிக்க வேண்டும் என்பதுதான் அமித்தின் கனவு. தன்னையும், விராட் கோலியையும் ஒப்பிடுவதே அவருக்கு பிடிக்கவில்லை.
நன்றி: www.wittyfeed.com