கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டை சூரத் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்.20) நிராகரித்தது.
அப்போது ராகுல் காந்தியின் வழக்குரைஞர் வாதங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம் ராகுலின் கருத்துகள் மனுதாரரின் வலி மற்றும் வேதனையை ஏற்படுத்தியது என்பதை நம்புகிறோம் என்றனர்.
தொடர்ந்து செசன்ஸ் நீதிமன்றத்தில் உத்தரவை பிறப்பித்த கூடுதல் அமர்வு நீதிபதி ராபின் பி மொகேரா, காந்தி ஒரு எம்.பி மற்றும் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியின் தலைவர் என்றும், “மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தனது வார்த்தைகளில் அவர் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்டு நீதிமன்றம், “மேல்முறையீட்டாளர் பொது மக்களிடையே மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எதிராக சில தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், மேலும் மோடியின் குடும்பப்பெயர் கொண்ட நபர்களை திருடர்களுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்” எனக் கூறியது. தொடர்ந்து, பூர்ணேஷ் மோடி பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள முன்னாள் அமைச்சர் என்று கூறிய நீதிமன்றம், "இதுபோன்ற அவதூறு கருத்துக்கள் நிச்சயமாக அவரது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சமூகத்தில் அவருக்கு வேதனையையும் வேதனையையும் ஏற்படுத்தும்" என்று கூறியது.
முன்னதாக ராகுல் காந்திக்கு மார்ச் 23ஆம் தேதி நீதிமன்றம் கிரிமிளல் அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தது.
இதையடுத்து வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியை இழந்த ராகுல் காந்தி, இந்தத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக வழக்குரைஞர் கிரிட் பன்வாலா கூறுகையில், “ராகுல் காந்திக்கு சாதகமாக தீர்ப்பு வராவிட்டால், அவர் உயர் நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும்.
ஒருவேளை அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவர் சிறைக்கு செல்ல நேரிடும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“