/tamil-ie/media/media_files/uploads/2021/10/Channi-Kejriwal.jpg)
பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, டெல்லி முதல்வர் நல்ல ஆடைகளை அணிய வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆடையில் கவனிக்காமல், தொகுதிக்குக் கொடுத்த வாக்குறுதிகளை சென்று கவனியுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் என கூறியுள்ளார்.
அண்மையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்வர் சன்னி பேட்டியளித்த போது, பஞ்சாப் காங்கிரஸ் குழப்பத்தில் உள்ளது என்ற கெஜ்ரிவாலின் அறிக்கைகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " யாராவது நல்ல ஆடைகளை வாங்க கெஜ்ரிவாலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும். அவரிடம் கோட் சூட் கூட இல்லையா.மாதம் இரண்டரை லட்சம் சம்பாதிக்கும் அவர், குறைந்தபட்சம் ஒரு சில நல்ல ஆடைகளாவது வைத்திருக்க வேண்டும்" என்றார்.
चन्नी साहिब, आपको मेरे कपड़े पसंद नहीं। कोई बात नहीं। जनता को पसंद हैं
कपड़े छोड़ो। ये वादे कब पूरे करोगे?
1. हर बेरोज़गार को रोज़गार कब दोगे
2. किसानों के क़र्ज़े कब माफ़ करोगे
3. बेअदबी के दोषियों को जेल क्यों नहीं भेजते
4. दागी मंत्रियों, MLA और अफ़सरों पर ऐक्शन कब लोगे https://t.co/EKw2rd8qdB— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 6, 2021
இவர் பேசிய காணொலி வைரலாக, அவருக்கு டெல்லி முதல்வர் பதிலளித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்தப் பதிவில், " உங்களுக்கு எனது ஆடை பிடிக்கவில்லையென்றால் பரவாயில்லை. மக்களுக்கு பிடித்திருக்கிறது. எனது ஆடையைக் குறித்துப் பேசுவதை விட்டுவிட்டு, தொகுதிக்கு உறுதியளித்த வேலையின்மை ஒழிப்பது, விவசாயிகளின் கடனை ரத்து செய்வது, கறைபடிந்த அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற வாக்குறுதிகள் மீது கவனம் செலுத்துங்கள்" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.