நல்ல டிரஸ் வாங்க யாராவது காசு குடுங்க… வம்பிழுத்த சன்னிக்கு கெஜ்ரிவால் பதிலடி

மாதம் இரண்டரை லட்சம் சம்பாதிக்கும் அவர், குறைந்தபட்சம் ஒரு சில நல்ல ஆடைகளாவது வைத்திருக்க வேண்டும்

பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, டெல்லி முதல்வர் நல்ல ஆடைகளை அணிய வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆடையில் கவனிக்காமல், தொகுதிக்குக் கொடுத்த வாக்குறுதிகளை சென்று கவனியுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் என கூறியுள்ளார்.


அண்மையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்வர் சன்னி பேட்டியளித்த போது, பஞ்சாப் காங்கிரஸ் குழப்பத்தில் உள்ளது என்ற கெஜ்ரிவாலின் அறிக்கைகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” யாராவது நல்ல ஆடைகளை வாங்க கெஜ்ரிவாலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும். அவரிடம் கோட் சூட் கூட இல்லையா.மாதம் இரண்டரை லட்சம் சம்பாதிக்கும் அவர், குறைந்தபட்சம் ஒரு சில நல்ல ஆடைகளாவது வைத்திருக்க வேண்டும்” என்றார்.


இவர் பேசிய காணொலி வைரலாக, அவருக்கு டெல்லி முதல்வர் பதிலளித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்தப் பதிவில், ” உங்களுக்கு எனது ஆடை பிடிக்கவில்லையென்றால் பரவாயில்லை. மக்களுக்கு பிடித்திருக்கிறது. எனது ஆடையைக் குறித்துப் பேசுவதை விட்டுவிட்டு, தொகுதிக்கு உறுதியளித்த வேலையின்மை ஒழிப்பது, விவசாயிகளின் கடனை ரத்து செய்வது, கறைபடிந்த அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற வாக்குறுதிகள் மீது கவனம் செலுத்துங்கள்” என தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: He should wear better clothes channi on kejriwal

Next Story
டெல்லி ரகசியம்: அமித் ஷாவின் அடுத்த பயணம் காஷ்மீர்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X