Advertisment

பிரசாந்த் கிஷோர் சொந்த விளம்பரத்துக்காக பேசுகிறார்.. நிதிஷ் குமார்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 2018இல் சேர்ந்த பிரசாந்த் கிஷோர், 2020ஆம் ஆண்டு நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கட்சியை விட்டு விலகினார்.

author-image
WebDesk
New Update
‘He speaks for his own publicity’: Nitish Kumar hits back at Prashant Kishor

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர்

நிதிஷ் குமார் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், சூழ்நிலை தேவைப்பட்டால் மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி சேரலாம் என்றும் பிரசாந்த் கிஷோர் விமர்சித்திருந்தார். இதற்கு வெள்ளிக்கிழமை (அக்.21) பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதிலளித்துள்ளார்.

Advertisment

மேலும், 'அவர் இளையவர். நான் மதித்தவர்கள் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்' எனக் கூறினார்.

பிரசாந்த் கிஷோர் பீகாரில் நடைபயணம் மேற்கொண்டுவருகிறார். இந்த நடைபயணத்தின்போது பல தரப்பட்ட மக்களை அவர் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நிதிஷ் குமார், பாரதிய ஜனதாவுடன் இன்னமும் தொடர்பில் உள்ளார் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தேசிய கூட்டணியை தீவிரமாக உருவாக்கி வருகிறார் நிதிஷ்குமார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அவர் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்பில் உள்ளார் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவார்கள்.

அவர் (நிதிஷ் குமார்) தனது கட்சி எம்.பி.யும், ராஜ்யசபா துணைத் தலைவருமான ஹரிவன்ஷ் ஜி மூலம் பா.ஜ.,வுடன் தொடர்பில் உள்ளார். பாஜகவுடனான உறவை ஜே.டி.யு துண்டித்தாலும், ஹரிவன்ஷ் தனது ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்யவில்லை.

இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போதெல்லாம், அவர் மீண்டும் பாஜகவுக்குச் சென்று அதனுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்" என்றார்.

கிஷோர் 2018 இல் JD(U) இல் சேர்ந்தார் மற்றும் அதன் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு கூட உயர்த்தப்பட்டார், ஆனால் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் நிதிஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jd U Nitish Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment