Advertisment

ஹெல்த் பட்ஜெட் 2024: அனைத்து சிறுமிகளுக்கும் எச்.பி.வி தடுப்பூசி; நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?

9 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் பள்ளிகள் அல்லது அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் போடப்படும்.

author-image
WebDesk
New Update
hpv vaccine

எச்.பி.வி தடுப்பூசி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாட்டில் 9 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் பள்ளிகள் அல்லது அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் போடப்படும்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Health Budget 2024: How govt plans to make HPV vaccine for every girl a part of its immunisation programme

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தனது நோய்த்தடுப்பு திட்டத்தில் மனித பாப்பிலோமா வைரஸுக்கு (human papilloma virus) (எச்.பி.வி) தடுப்பூசி செலுத்தும் அரசாங்கத்தின் விருப்பத்தை அறிவித்தார். “கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி போடுவதை நமது அரசாங்கம் ஊக்குவிக்கும்,” என்று அவர் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு அரசாங்கம் எச்.பி.வி தடுப்பூசி பிரசாரத்தை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியிட வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் மூன்று ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக தகுதியுள்ள அனைத்து சிறுமிகளையும் உள்ளடக்கியது. 9 வயதில் பெண்களுக்கான வழக்கமான தடுப்பூசியின் ஒரு பகுதியாக தடுப்பூசி பின்னர் செலுத்தப்படும். இந்த பிரசாரமானது செர்வாவாக் எனப்படும் இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் விற்பனை செய்யப்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசியைப் பயன்படுத்தும். லான்செட் ஆய்வில் இது உலகளாவிய தடுப்பூசிகளைப் போலவே பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. “கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக 9-14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான அரசாங்கத்தின் அறிவிப்பை நான் பாராட்டுகிறேன். எச்.பி.வி-ஐத் தடுக்கவும், தடுப்பூசியை எளிதாக அணுகுவதை உறுதி செய்வோம் என்றும் உறுதியளிப்போம்” என்று எஸ்.ஐ.ஐ-ன் சி.இ.ஓ அடர் பூனவல்லா கூறினார்.

தற்போது, குவாட்ரிவலன்ட் தடுப்பூசி வணிக ரீதியாக ஒரு டோஸ் ரூ.2,000 விலையில் கிடைக்கிறது. எச்.பி.வி-யின் மிகவும் பொதுவான 4 வகைகளுக்கு எதிராகப் பாதுகாக்கும் ஒரே எச்.பி.வி தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூ. 4,000 என்ற விலையில் கிடைக்கிறது.

தடுப்பூசி பிரச்சாரம் எவ்வாறு உதவுகிறது?

95 சதவீதத்திற்கும் அதிகமான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நோயாளிகள் ஒரு குறிப்பிட்ட உயர்-ஆபத்து வகை எச்.பி.வி உடன் தொடர் நோய்த்தொற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் தடுப்பூசி பிரச்சார நிகழ்வுகள் இறப்புகளை திறம்பட குறைக்க முடியும். எச்.பி.வி நோய்த்தொற்று ஆசனவாய், பிறப்புறுப்பு மற்றும் ஓரோபார்னக்ஸ் ஆகியவற்றின் புற்றுநோய்களுடன் தொடர்புடையது. எனவே, இந்த  தடுப்பூசி பிரச்சாரம் இவற்றின் நிகழ்வுகளிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

16, 18, 6 மற்றும் 11 ஆகிய நான்கு மிகவும் பொதுவான புற்றுநோயை உண்டாக்கும் வகைகளான எச்.பி.வி-களின் தொற்றுகளைத் தடுக்கும் இந்த குவாட்ரிவேலண்ட் தடுப்பூசி, பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படலாம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.25 லட்சம் நோயாளிகள் பதிவாகி 75,000 இறப்புகள் நிகழ்கின்றன.

இந்த தடுப்பூசிகளை யார், எங்கே பெறுவார்கள்?

9 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுமிகளும் அடுத்த 3 ஆண்டுகளில் தங்கள் பள்ளிகள் அல்லது அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகளைப் பெறுவார்கள். சுகாதார அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகம் ஆகியவை இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க உதவும்.

நாடு முழுவதும் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட 8 கோடி குழந்தைகள் தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள். 3 ஆண்டுகளாகப் பிரித்தால், முதல் ஆண்டில் குறைந்தபட்சம் 2.6 கோடி குழந்தைகள் தடுப்பூசி பெற தகுதி பெறுவார்கள். இந்த 2.6 கோடி குழந்தைகளைத் தவிர, ஏற்கெனவே பிரச்சாரம் செய்யப்பட்டுள்ள இடங்களில் 9 வயதாக இருக்கும் மேலும் 50 லட்சம் முதல் 1 கோடி குழந்தைகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் தடுப்பூசி டோஸ் தேவைப்படும்.

தடுப்பூசியை வெளியிட அரசாங்கம் எவ்வாறு தயாராகிறது?

தடுப்பூசிகளை வாங்குவதில் அரசாங்கம் இன்னும் வேலை செய்துவரும் நிலையில், மற்ற ஏற்பாடுகள் ஏற்கெனவே நடந்து வருகின்றன. எச்.பி.வி தடுப்பூசியை செலுத்துவது குறித்த பயிலரங்குகள் 2023-ல் நடத்தப்பட்டதாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.  3 ஒருங்கிணைப்பு அமைச்சகங்களின் அதிகாரிகளும் மையங்களில் தடுப்பூசிகள் திறம்பட கிடைப்பதை உறுதி செய்ய பயிற்சி அளிக்கப்படும்.

எந்த தயக்கமும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக தடுப்பூசி வெளியிடப்படுவதற்கு முன் தகவல் தொடர்பு பற்றிய தயாரிப்பும் உள்ளது. 9-15 வயதுக்குட்பட்டவர்களில் எச்.பி.வி தடுப்பூசியின் ஒற்றை டோஸ் விதிமுறையின் செயல்திறன் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் (என்.டி.ஜி.ஐ) பரிந்துரைத்துள்ளது. உலக அளவில் கிடைக்கும் அனைத்து எச்.பி.வி தடுப்பூசிகளும் 2 டோஸ் அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினாலும், உலக சுகாதார நிறுவனம் ஒரு டோஸ் கூட வியக்கத்தக்க உயர் செயல்திறன் கொண்டது என்று கூறுகிறது.

தடுப்பூசியின் தற்போதைய ஆதாரம் என்ன?

எச்.பி.வி தடுப்பூசி திட்டங்களைக் கொண்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகள் குறைந்துள்ளன. எச்.பி.வி நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தடுப்பூசிகள் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், 2000-ம் ஆண்டின் பிற்பகுதியில் தடுப்பூசி புற்றுநோய்க்கு முந்தைய புண்களின் நிகழ்வைக் குறைத்தது என்பதற்கான சான்றுகள் வெளிவந்தன. 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்தின் ஆய்வுகள் பதின்பருவத்தில் தடுப்பூசி போடுவது 30 வயதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தை 85 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்கும் என்பதை நிரூபித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Union Budget
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment