மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் அளிப்பவர். அவர் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அமைச்சகத்தின் கேன்டீனில் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்கிட உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில், செவ்வாய்கிழமை அமைச்சக கேன்டீனில் ஊட்டச்சத்து உணவு சேர்க்கப்பட்டது. முதல் நாளில், கேன்டீனில் பட்டாணியுடன் மூங் டால் சீலா வழங்கப்பட்டது. தினசரி மெனுவை கூடுதல் செயலாளர் மேற்பார்வையிடுவது குறிப்பிடத்தக்கது.
நீதிபதிக்கு வாட்ஸ்அப்பில் கோரிக்கை
தங்க சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட குழுவிற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், பாதிக்கப்பட்டவர்கள் தான் இருக்கும் வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பப்பட்ட செய்திகள் குறித்து கவலை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், " இந்த வழக்கு தொடர்பான வாட்ஸ்அப் செய்திகளை பெற விரும்பவில்லை. யாரோ ஒருவர் எனது குழுக்களுக்குள் நுழைந்து செய்திகளை அனுப்புகிறார். முதலீட்டாளர்கள் நீதி கேட்டு எங்களுக்கு வாட்ஸ்அப் செய்திகளை அனுப்புவது குறித்து கவலை தெரிவிக்கிறோம். இந்த முயற்சியை பாராட்டுகிறோம், ஆனால் இது நீதியைப் பெறுவதற்கான வழி அல்ல.இது போன்ற செயல்களில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றார்.
போப், மார்க்ஸை சுட்டிக்காட்டிய எம்.பி
போப் மற்றும் கம்யூனிஸ்ட் தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் ஆகிய இருவரின் பெயர்களையும் ஒரே வாதத்திற்கு பயன்படுத்துவதை காண முடியாது. ஆனால், மாநிலங்களவையில் பட்ஜெட்டை விமர்சித்து CPI உறுப்பினர் பினோய் விஸ்வம் அதனை செய்துக்காட்டினார்.
முதலில், புதிய தாராளமயம்,சந்தைகளில் நம்பிக்கையின் வரம்புகள் பற்றி போப் பிரான்சிஸ் கூறியதை விஸ்வம் மேற்கோள் காட்டினார். உடனடியாக, கார்ல் மார்க்ஸை கூறியதை சுட்டிக்காட்ட தொடங்கினார். ஆனால், அதற்குள் ஒதுக்கப்பட்ட நேரம் நிறைவடைந்தது.
மார்க்ஸைப் பயன்படுத்தி தனது இறுதிக் கருத்தைச் சொல்ல முயன்றபோது, சீதாராமன் எழுந்து விஸ்வம் முதலில் போப் பிரான்சிஸை மேற்கோள் காட்டினார், உடனடியாக மார்க்ஸை மேற்கோள் காட்டுகிறாரா? நான் சரியா என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்றார். அவையில், சிறிது சிரிப்பு சத்தம் கேட்க தொடங்கியது. ஆனால் அடுத்த பேச்சாளர் தனது உரையைத் தொடங்கும் முன் விஸ்வம் மார்க்ஸ் குறித்து மேற்கோள் காட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil