H3N2 வைரஸ் பரவலைக் கண்காணிக்க மத்திய சுகாதார அமைச்சகம் வலையமைப்பை உருவக்கியுள்ளது. H3N2 வைரஸைத் தடுக்க ஐ.சி.எம்.ஆர் ஆலோசனை வெளியிட்டுள்ளது. பருவகால காய்ச்சல் பாதிப்புகள் மார்ச் இறுதிக்குள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் நாட்டில் H3N2 வைரஸ் காய்ச்சல் பரவல் முதலிடத்தில் உள்ளது. தற்போது வைரஸ் பரவல் நிலையை அறிய நிகழ்நேர அடிப்படையில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் நெட்வொர்க் மூலம் கண்காணிக்கிறது. இது நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு விகிதத்தைக் கண்காணித்து, குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களிடையே கண்காணிக்கிறது. இதுவரை கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் எச்3என்2 காய்ச்சலால் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
பருவகால காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் கடுமையான சுவாச தொற்று ஆகும். இது உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது. வழக்கமாக, பருவகால காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகளை இந்தியா காண்கிறது: ஒன்று ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையிலும், மற்றொன்று பருவமழைக்குப் பிந்தைய காலத்திலும் எதிர்கொள்கிறது. பருவகால காய்ச்சலால் எழும் நோய்கள் மார்ச் இறுதியில் இருந்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த பொது சுகாதார சவாலை எதிர்கொள்ள மாநில கண்காணிப்பு அதிகாரிகள் முழுமையாக தயாராக உள்ளனர்” என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
H3N2 இன் மருத்துவ அம்சங்கள் என்ன?
புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்த துணை வகை மற்ற இன்ஃப்ளூயன்ஸா துணை வகைகளை விட அதிக நொயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கப்படுவதை ஏற்படுத்தியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் -கண்டறிந்துள்ளது. “சுமார் 92 சதவீத நோயாளிகள் காய்ச்சல் பாதிப்பாலும், 86 சதவீதம் பேர் இருமலாலும் 27 சதவீதம் பேர் மூச்சுத் திணறல் பாதிப்பாலும் 16 சதவீதம் பேர் மூச்சுத்திணறல் பாதிப்பாலும், 16 சதவீதம் பேர் நிமோனியாவாலும் மற்றும் 6 சதவீதம் பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 10 சதவீத நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. 7 சதவீத நோயாளிகளுக்கு ஐசியூ கவனிப்பு தேவைப்படுகிறது” என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
தடுப்பு நெறிமுறைகள் என்றால் என்ன?
அனைத்து காய்ச்சல் வைரஸ்களுக்கும் பொருந்தும் என்பதால், சில COVID காலத்தில் பிறப்பிக்கப்பட்ட நெறிமுறைகளை அமைச்சகம் மீண்டும் வழங்கியுள்ளது. நெரிசலான இடங்களில் முகமூடிகளை அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலம் தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்தல், கைகளைக் கழுவாமல் சாப்பிடக்கூடாது அல்லது முகம் மற்றும் வாயைத் தொடக்கூடாது. இருமல் மற்றும் தும்மலின் போது முகம் மற்றும் வாயை மூடிக்கொள்வது மற்றும் ஏராளமான திரவங்களை உட்கொள்வது ஆகியவை இதில் அடங்கும். உடல் ரீதியான தொடர்பைத் தவிர்க்கவும், நோய்த்தொற்று ஏற்பட்டால், எச்சில் துப்புதல் மற்றும் சமூக தொடர்புகளைத் தவிர்க்கவும், நுண்ணுயிர் எதிர்ப்புகள் அல்லது பாராசிட்டமால் தவிர சீரற்ற மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றவும் என பரிந்துரைத்துள்ளது.
உண்மையான நிகழ்நேர கண்காணிப்பு
இன்ஃப்ளூயன்ஸா (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் (எஸ்ஏஆர்ஐ) போன்ற இன்ஃப்ளூயன்ஸாவின் நிகழ்நேர கண்காணிப்பு, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (ஐடிஎஸ்பி) மற்றும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றால் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவுகளிலும், (NCDC) 28 இடஙகளிலும் பதிவாகியுள்ளது. IDSP-IHIP (ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் தளம்) இல் கிடைக்கப்பெற்ற சமீபத்திய தரவுகளின்படி, H3N2 உட்பட, 3,038 ஆய்வக உறுதிப்படுத்தப்பட்ட பல்வேறு வகையான இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் மார்ச் 9 வரை பதிவாகியுள்ளன. இதில் ஜனவரியில் 1,245 நோயாளிகளும் பிப்ரவரியில் 1,307 நொயளிகளும் அடங்குவர். மார்ச் மாதத்தில் இதுவரை 486 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“