Advertisment

பாலகோட்டில் பலத்த சத்தத்துடன் அரங்கேறிய தாக்குதல்.. அன்றைய இரவு விடிந்தது எப்படி?

பலியானவர்களின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிட்டு கூற முடியாததால்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாலகோட்

பாலகோட்

இந்திய விமானப்படை கடந்த திங்கள்-செவ்வாய் இரவில் பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயிற்சி முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது. பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலையில் பாலகோட்டில் அரங்கேறிய தாக்குதலில் இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஜெய்ஷ்-இ-முகமது மதராஸ் பகுதியில் இருந்து மாணவர்களை அவசர அவசரமாக வெளியேற்றி அவர்களை அருகில் இருக்கும் பாதுகாப்பான இல்லத்தில் தங்க வைத்தனர்.

Advertisment

அந்த நேரத்தில் மாணவர்களுடன் தங்கிருந்த உறவினர் ஒருவர், இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் பகிர்ந்தக் கொண்ட திக் திக் தருணங்கள்.

”பிப்ரவரி 26 ஆம் தேதி பாலகோட் பகுதியில் தாக்குதல் நடைபெற்ற பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு அளித்தனர். அந்த பகுதியில் இருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அறையில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் பலத்த சத்தத்தைக் கேட்டு அலறியடித்துக் கொண்டு எழுந்தனர். விடிந்த பின்பு அந்த பகுதி முழுவதும் அடர் இருட்டு மற்றும் புகை கலையவில்லை.

அந்த சத்தம் ஏதோ வீட்டுக்கு அருகாமையில் கேட்பது போலவே ஒரு உணர்வு. தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் பீதியுடன் எழுந்தனர். சத்தத்தை கேட்டு எழுந்த மாணவர்கள் சிலர் அது அவர்களின் கனவு என நினைத்து மறுபடியும் தூங்க சென்றனர்.

பாலகோட் முகாமில் 3 வருடங்கள் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள்.. வெளிவரும் பகீர் தகவல்கள்!

சிலர் இதை பூகம்பம் என்று கூட நினைத்து பதறினார்கள். சிலருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சிலருக்கு வெளியே சென்று பார்க்கலாமா? கேட்கலாமா? என்ற குழப்பம் ஒரு பக்கம். இங்கே தங்க வைக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் நிலையை நினைத்து அவர்களின் குடும்பத்தார் ஆழ்ந்த பிராத்தனையில் ஈடுப்பட்டிருந்தனர்.

பின்னர் ராணுவ வீரர்கள் அங்கிருந்த மாணவர்களை மற்றொரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கே அவர்கள் 2 அல்லது 3 நாட்கள் தங்க வைக்கப்படிருந்தனர். மதராசில் நிறைய மாணவர்கள் தங்கி இருந்தனர்.

இதில் அனைத்து வயதினரும் கலந்திருந்தனர். அந்த பகுதி மக்கள் அனைவருமே பாதுகாப்பான இடத்திற்கு சென்றார்களா? என்றால் அது சந்தேகம் தான். சிலருக்கு தாக்குதல் நடந்த இடம், காரணம் எதுவும் தெரியாது. சிலருக்கு அவர்களது உறவினர்கள், நண்பர்களுக்கு என்ன நடந்தது என்பது கூட தெரியாது.

பின்பு இதுக்குறித்து புகைப்படங்கள் வெளியாகியது. அதன் மூலம் பலர் தங்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்களை அடையாளம் கண்டுக் கொண்டனர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அறிந்துக் கொண்டனர். அமைதி திரும்பிய பின்பு அனைவரும் சொந்த வீட்டிற்கு புறப்பட்டனர்.

அனைவருமே மீண்டும் மதராஸ் செல்வதில் உறுதியாக இருந்தனர்” என்று விவரித்தார்.

ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்களின் மீது நடத்திய தாக்குதலில், மதரஸா தலீம்-உல்-குரான் அமைப்பினுடைய வளாகத்தின் உள்பக்க கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதாக அரசு தரப்பு ஏஜென்சி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது.

SAR மூலம் கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள், செயற்கைக்கோள் படங்கள் அளவிற்கு தெளிவாக இல்லை. தவிர, கடந்த செவ்வாய் அன்று நிலவிய கடுமையான மேகமூட்டம் காரணமாக, தெளிவான செயற்கைக்கோள் புகைப்படங்களும் நமக்கு கிடைக்கவில்லை. இதனால் தான் விவாதம் அதிகமானது.

மேலும் உறுதியான புகைப்படங்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிட்டு கூற முடியாததால் இதுக்குறித்து பேச்சுகள் அதிகப்படியாக பரவி வருகின்றன”

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment