/indian-express-tamil/media/media_files/2025/10/22/rain-rangasamy-2-2025-10-22-13-44-38.jpg)
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரவு முழுவதும் காரிலேயே மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
புதுச்சேரியில் பகல், இரவாக கொட்டித் தீர்த்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.
புதுச்சேரியில் நேற்று அதிகாலை முதலே மழை பெய்து வந்தது. நேற்று இரவு 7 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் கனமழையாக உருவெடுத்தது. தொடர்ந்து இடைவிடாது 3 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்பட்டது.
புதுவையின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, கா.மராஜர் சாலை, நேரு வீதி, புஸ்சி வீதி, சின்ன சுப்புராயப்பிள்ளை வீதி, மறைமலையடிகள் சாலை, இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், புவன் கரே வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
உப்பனாறு வாய்க்கால், சின்னவாய்க்கால், பெரிய வாய்க்கால் நிரம்பி வழிந்தது. அத்துடன் பல இடங்களில் பாதாள
சாக்கடைகளும் நிரம்பி கழிவுநீர் வெளியேறி மழை தண்ணீருடன் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர்,
முத்தியால்பேட்டை டி.வி. நகர், பூமியான்பேட்டை பாவாணர் நகர், முதலியார் பேட்டை புவன்கரே வீதி, உருளையன்பேட்டை பெரியார் நகர், தோட்டக்கால், குண்டுசாலை உள்ளிட்ட இடங்களில் வீடுகள், கடைகளுக்குள் மழை தண்ணீர் புகுந்தது.
தொடர்ந்து இரவிலும் கொட்டித்தீர்த்த மழையால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளானார்கள். புதுவைக்கு ஆரஞ்சு எச்ச
ரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
இதனால் படகுகள் அனைத்தும் தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பால், பிஸ்கட், பிரட் உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர்.
இதனால் பாண்லே மற்றும் தனியார் பாலகங்களில் பால் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக நடந்தது. காரைக்கால், நெடுங்காடு, திருப்பட்டினம், சேத்தூர், கோட்டுச்சேரி, திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 5 ஆயிரம் ஏக்கர் நெற்யிர்கள் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் தொடர் மழை யால் திருநள்ளாறு, செல்லூர், தென்னங்குடி, அகலகண்ணு, நெடுங்காடு அத்திப்படுகை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரா முறையாகதூர் வாராததாலும் வயலில் தேங்கிய தண்ணீரை உடனடியாக வடிய வைக்க முடியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இன்னும் சில நாட்கள் மழை தொடரும் பட்சத்தில் இளம் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி சேதமடைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம் புறவழிச்சாலையால் நீர் வழிப்பாதைகள் அடைக்கப்பட்டதால் பாகூர் பகுதியில் 150 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.
புதுச்சேரியின் நெல் களஞ்சியமாக பாகூர் பகுதி விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையால் பாகூர் பகுதியில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. மழைக்கு முன்பாக வாய்க்கால் தூர்வாரப்படாததால்தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இப்பிரச்சினைக்கு விழுப்புரம் - நாகை 4 வழிச் சாலையில் முன்பு இருந்த வடிகால் வாய்க்கால்கள் மூடியதே கார்ணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
புதுவையின் பூலோக அமைப்பின்படி நீரோட்டம் என்பது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கியே இருக்கும்.
ஆனால், புறவழிச்சாலை பணியின்போது, நீர் வழித் தடங்கள் ஆங்காங்கே தடைபட்டதால் சாலையின் மேற்கு
பகுதி வயல்களில் தேங்கும் மழைநீர் வடிவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
நீரில் மூழ்கியது பாகூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அடைமழை பெய்வதால் வரத்து வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடவு செய்த நெல் வயல்களில் சுமார் 150 ஏக்கரில் தண்ணீர் புகுந்து, இளம் பயிர்கள் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பருவமழையின்போது பாகூர் கிழக்கு பகுதியில் புறவழிச் சாலையில் கன்னியக்கோவில் பகுதியில் விளைநிலத்தில்
தேங்கிய தண்ணீர் வடிய சுமார் ஒருமாதம் ஆனதால் பயிர்கள் அழுகி நாசமானது. அப்போது பொதுப்பணித்
துறை, வேளாண்துறை அதிகாரிகள் நிலத்தை பார்வையிட்டு சென்றார்கள். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக அரசு துரித நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ் வாதாரத்தை காக்க வேண்டும்
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us